அம்மாவின் சீக்ரெட்டை உடைத்த மகள் ஜோவிதா...பிக் பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தும் வனிதா!
பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை வனிதா குறித்து மகள் ஜோவிகா மனம் திறந்துள்ளார்.
அதன்படி நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிதா, “எங்க அம்மா ஒரு திறந்த புத்தகம். அவங்களுக்கு சீக்ரெட்ட வெச்சுக்கவே தெரியாது.
கண்டிப்பா அதுல இருந்து ஒரு அழகான ஸ்டோரியை சொல்வதற்கும் வாய்ப்பு உண்டு” என்று தம்முடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பை போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் நடக்கிறது.
பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்களை 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது.
அதே போல் இந்த நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.