வீல் சேரில் நவரச நாயகன் கார்த்திக்.... உண்மையில் அவரது பிரச்சனை என்ன?
நவரச நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் வீல் சேரில் அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், மகன் இதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
நடிகர் கார்த்திக்
நடிகர் கார்த்திக் 1981ம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தனது நடிப்பு மற்றும் அழகான பேச்சு ரசிகர்களை மனதினை கொள்ளை கொண்டது.
ரசிகர்களால் நவரச நாயகன் என்று அழைக்கப்பட்டு வருகின்றார். பல படங்களில் நடிகர் கார்த்திக் நடித்திருந்தாலும் சில படங்கள் தோல்வியடைந்தது.
இவரது மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நடித்து வருகின்றார். இந்நிலையில் கார்த்திக் குறித்து சமூகவலைத்தளங்களில் பல வதந்திகள் வெளிவருகின்றது.

மகன் கொடுத்த பதில்
இந்நிலையில் கௌதம் கார்த்திக் தனது தந்தையைக் குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துக்களைக் குறித்து மனம் திறந்துள்ளார்.
தனது அப்பாவைக் குறித்து எதுவும் தெரியாமல் மற்றவர்கள் தவறாக பேசுவது தனக்கு வருத்தமாக இருப்பதாகவும், ஒரு பொது தளத்தினை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.
அதே போன்று கார்த்திக் மாஸ்க் அணிந்து கொண்டு வீல் சேரில் அமர்ந்திருந்த புகைப்படம் வைரலாகியதற்கும் விளக்கம் அளித்துள்ளார். சினிமாவில் நடிக்காததால் நடிகர் கார்த்திக்கு பிரச்சனை என்று கூறப்படுகின்றது.

ஆனால் அப்பாவிற்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை... தற்போது வயதாகின்றது என்பதால் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வருகின்றோம்.
அவ்வாறு அழைத்து வரும் போது அவருக்கு படிக்கட்டு ஏறமுடியவில்லை என்பதால் வீல்சேரில் அழைத்து வந்ததாகவும், குறித்த புகைப்படத்தினை அவதானித்து பலரும் பலவிதமாக பேச வேண்டாம். அப்பா நன்றாக இருப்பதாகவும், ரசிகர்களை அதிகமாக நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |