பிறந்தநாளில் எனக்கு இந்த பரிசை தாருங்கள்! ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கார்த்தி
இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது, இந்நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கார்த்தி தன்னுடைய ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அதில்,
அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்!
இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது! அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, 'மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி;
தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்'.
இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்! என தெரிவிக்கப்பட்டுள்ளது.