வில்லனுக்கே வில்லத்தனம் காட்டிய உறவினர்! கசாயத்தில் விஷம் கொடுத்த அதிர்ச்சி
எனக்கு மருந்து தருவதாக கூறி விஷம் கொடுத்தார்கள் என முன்னாள் நடிகர் ஜே.டி சக்கரவர்த்தி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன்களில் ஒருவர் தான் நடிகர் ஜே.டி சக்கரவர்த்தி.
இவர் பிரதாப், சமர், கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் வில்லனாக வந்து மாஸ் காட்டியிருப்பார்.
இதனை தொடர்ந்து பெரியளவு இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அண்மையில் இவர் ஊடகங்களுக்கு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்தார்..
அதில், “ எனக்கு சில மாதங்களுக்கு முன்னர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா என பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன். ஆனாலும் என்னால் இந்த நோயை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நோய் ஒரு கட்டத்தில் என்னை சோர்வடைய வைத்தது. பிழைப்பது கஷ்டம் என மருத்துவர்கள் கை விரித்து விட்டார்கள்.
அப்போது தான் நாகார்ஜுனா என்ற மருத்துவர் எனக்கு எனக்கு ஏன் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என கண்டுபிடித்தார். அவர் கூறிய சில விடயங்களை வைத்து பார்த்த போது தான் சில விடயங்கள் எனக்கே புரிய வந்தது.
எனக்கு சில மாதங்களுக்கு முன்னர் குறித்த நபர் ஒருவர் ஒரு வகை கசாயம் கொடுத்தார். அந்த கசாயத்தில் தான் எனக்கு விஷம் கலந்து கொடுத்துள்ளார்.” என கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |