அடேங்கப்பா.. தலைசுற்றி வைக்கும் ஜாக்கி சானின் சொத்து மதிப்பு- எவ்வளவு தெரியுமா?
90களில் சிறார்களின் நாயகனான இருந்து நடிகர் ஜாக்கி சானின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஜாக்கி சான்
90களில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் நிறைய விடயங்களில் தற்போது இருக்கும் குழந்தைகளை விட அதிர்ஷ்சாலிகளாக இருந்தார்கள்.
அந்த வகையில், சிறார்களாலும், இளைஞர்களாலும் அதிகமாக கொண்டாடப்பட்ட நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி ஒரு நடிகர் தான் ஜாக்கி சான்.
இவர், வழக்கமான சினிமா நடிகர் என்றாலும் ஒரு நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமே கொண்டாடிய நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்து ஹாலிவுட் வரை சென்று, தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கெத்து காட்டிய நடிகர் ஜாக்கி சான் வசூல் ராஜாவாகவும் வலம் வந்தார்.
இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சியில் அதிரடி திருவிழா மூலமாக தமிழ் மக்களுக்கு பரீட்சயமானார். ஜாக்கி சான் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான ”தி மித்” திரைப்படம் இந்தியாவின் சில இடங்களில் தான் படமாக்கப்பட்டது.
அத்துடன், கமல் நடிப்பில் வெளியான “தசாவதாரம்” படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
சொத்து மதிப்பு விவரங்கள்
இவ்வளவு சிறப்புமிக்க நடிகராக இருக்கும் ஜாக்கி சான், இன்றைய தினம் அவருடைய 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த தினத்தை முன்னிட்டு ஜாக்கி சானின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதன்படி, நடிப்பை தாண்டி ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல படங்களை இயக்கியுள்ளார்.
ஜாக்கி சானின் இன்று வரையான சினிமா பயணத்தில் மொத்தமாக 400 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்களை சம்பாரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ. 3300 கோடியாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |