யூத் ஐகான் விருது வென்ற தனுஷ்
ஒரு கலைஞனுக்கு சிறந்த பரிசு என்னவென்றால் அது அவரது திறமைக்காக வாங்கப்படும் விருதுகளே. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.
இவர் பன்முகத் திறமை கொண்டவர். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
தற்போது 'கேப்டன் மில்லர்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சென்னையில் தக்ஷின் மாநாட்டில் கலந்துகொண்டார் தனுஷ். இதில் இவருக்கு யூத் ஐகான் விருது வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் விருதைப் பெற்றுக்கொண்ட தனுஷ் உரையாற்றுகையில், “நாற்பது வயதில் இந்த யூத் ஐகான் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. சினிமாவுக்கு வந்த புதிதில் எனது தோற்றத்தைக் கண்டு ஏற்க மறுத்தனர். ஆனால், தற்போது என்னை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். இந்த நேரத்தில் எனது தாய், தந்தைக்கு நன்றி கூற விரும்புகிறேன்” என பேசியுள்ளார்.
இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையை சேர்ந்த அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.