உருவ கேலிக்கு நடிகர் தனுஷ் கொடுத்த பதிலடி! கொண்டாடும் ரசிகர்கள்; வைரல் வீடியோ
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் ஹாலிவுட் திரைப்படமான The Gray Man படத்தின் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 22-ம் தேதி, உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.
இதையடுத்து, இந்நிகழ்ச்சியின் ஃபுரமோஷன் நிகழ்ச்சியில் பேசியுள்ள நடிகர் தனுஷ், தன்னை தென்னிந்திய நடிகர் என அழைக்க வேண்டாம் அது பிடிக்கவில்லை, இந்திய நடிகர் எனக்கூறுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இனி தென்னிந்தியர்களுக்கான படம் மற்றும் வட இந்தியர்களுக்கான படம் என்று இல்லாமல் தேசியத் திரைப்படங்கள் என்று அனைவருக்காகவும் திரைப்படங்களை உருவாக்கினால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து ஒரு கேள்விக்கு, தனுஷ் அளித்த பதிலில், “உன்னுடைய உருவத்தை பார்த்து கிண்டல் செய்பவரை எண்ணி வருத்தப்படாதே.
ஒருநாள் மிகப்பெரிய ஹாலிவுட் ஹீரோ, உன்னை செக்ஸி தமிழ் நண்பா என்று அழைப்பார்” என்று கூறியுள்ளார்.
.@dhanushkraja has a message for his younger self and it’s the most badass advice we’ve ever heard ❤️? pic.twitter.com/XiCf4IcND0
— Netflix India (@NetflixIndia) July 24, 2022