மீண்டும் கமிட்டான தனுஷ்.. ரகசிய உறவில் இருக்கும் நடிகை யார் தெரியுமா?
நடிகர் தனுஷ், பிரபல நடிகை ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ்
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ்.
இவர், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிப்படங்களிலும் கதாநாயகராக நடித்து வருகிறார்.
நடிகர், இயக்குநர், பாடகர் இப்படி பன்முக திறமைக் கொண்ட தனுஷ், ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
ஆனாலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர். என்ன தான் விவாகரத்து வாங்கி பிரிந்தாலும் தங்களின் குழந்தைகளுக்காக இணைய வேண்டிய நிலையில், சேர்ந்து இருக்கிறார்கள்.
மீண்டும் கமிட்டான தனுஷ்
இந்த நிலையில், நடிகர் தனுஷ் பிரபல நடிகையொருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தனுஷ் டேட்டிங் செய்யும் நடிகை வேறு யாரும் இல்லை மிருணாள் தாகூர் தான் என தெரியவந்துள்ளது. கும் கும் பாக்யா எனும் சீரியலில் அறிமுகமான இவர், சில இந்தி படங்களில் நடித்திருக்கிறார்.
அதன் பின்னர், சீதா ராமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார். மிருணாள் தாகூர், தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார்.
சமீபத்தில் மிருணாள் தாகூர் நடிப்பில் சன் ஆஃப் சர்தார் 2 திரைப்பட விழா நடந்தது. அதில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். அத்துடன், ஒரு இரவு நேர பார்ட்டியில் மிருணாள் தாகூருவுடன் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
வெளியில் அனைவரும் இவர்கள் டேட்டிங் செய்வதாக பேசிக்கொண்டாலும், தனுஷ்-மிருணாள் தாகூர் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள், “இவர்கள் வெறும் நண்பர்கள்..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |