படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து: நடிகர் சேரன் வெளியிட்ட உருக்கமான பதிவு
சமீபத்தில் படப்பிடிப்பின் போது கீழே விழுந்து அடிபட்ட சேரன், தற்போது தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது கீழே தவறி விழுந்த சேரனுக்கு காயம் ஏற்பட்டு 8 தையல் போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தற்போது பூரண சுகம் பெற்று டுவிட் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் கீழே விழும் காட்சியில் சேரன் நிஜமாகவே வழுக்கி விழுந்துவிட்ட நிலையில், தையல் போடப்பட்டிருந்தும், 10 நிமிடத்தில் மீண்டும் வந்து நடித்துக்கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதை கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் நந்தா பெரியசாமி ரெிவித்திருந்தார்.
இந்நிலையில் சேரன் தற்போது ரசிகர்கள் மற்றும் ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். "மிக்க நன்றி.. எனக்காக வேண்டிக்கொண்ட, நலம்பெற செய்தி அனுப்பிய, ஆறுதலாய் அன்பு வார்த்தைகள் பகிர்ந்த அனைத்து டுவிட்டர் நண்பர்களுக்கும், பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.." என்று தெரிவித்துள்ளார்.
மிக்க நன்றி.. எனக்காக வேண்டிக்கொண்ட, நலம்பெற செய்தி அனுப்பிய, ஆறுதலாய் அன்பு வார்த்தைகள் பகிர்ந்த அனைத்து டுவிட்டர் நண்பர்களுக்கும், பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.. pic.twitter.com/23kvQ8CbY1
— Cheran (@directorcheran) August 8, 2021