விஜய் - த்ரிஷா தங்கமான ஜோடி! பிரபல நடிகையின் பதிவால் கடுப்பாகிய ரசிகர்கள்
விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் த்ரிஷா வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அதற்கு நடிகை போட்ட கமெண்ட் வைரலாகி வருகிறது.

விஜய் த்ரிஷா
தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாள் கடந்த ஜூன் 22-ம் தேதி கொண்டாடப்பட்டது.
இதற்கு உலகத்தில் அனைத்து பகுதியில் இருந்த விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடி வந்தனர்.

தற்போது விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவிற்கு இடையில் பல சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில் அவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பாரா என்று காத்துக்கொண்டிருந்தனர்.
பொதுவாக விஜய்யின் பிறந்தநாளுக்கு த்ரிஷா விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களை வைத்து தான் வாழ்த்து கூறுவார். ஆனால்2026ம் ஆண்டு வாழ்த்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

நடிகையின் பதிவு
இந்நிலையில்,
நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்பு வாழ்த்து பதிவை வெளியிட்டார்.
அதில், விஜய்யுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்து, “அனைத்துக்கும் தகுதியான நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என குறிப்பிட்டிருந்தார்.
த்ரிஷாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இதற்கிடையில், நடிகை சார்மி கவுர் அந்த பதிவின் கருத்துப் பகுதியில்,
“இருவரும் தங்கமான ஜோடி புரட்சியாளர்கள்” என்று பதிவிட்டுள்ளார். சார்மி கவுரின் இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பேசுபொருளாக மாறியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |