நடிகர் பாபி சிம்ஹாவிற்கு இவ்வளவு பெரிய குழந்தைகளா? வைரலாகும் புகைப்படம்
நடிகர் பாபி சிம்ஹாவின் குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் பாபி சிம்ஹா
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம்வரும் பாபி சிம்ஹா ஆந்திராவைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு தமிழில் மாய கண்ணாடி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பின்பு இதைத் தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி? என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் இவர், மிகப்பெரிய பிரேக் எடுத்தார்.

அதன் பின்பு தற்போது நல்ல படங்களில் வாய்ப்பு கிடைத்த நிலையில் சூது கவ்வும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.
இப்படத்தில் அப்பாவியாக குழந்தை போன்ற முகத்தோற்றத்தில் பகலவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்பு வில்லனாக பல படங்களில் களமிறங்கி அசத்தி வருகின்றார்.
பாபி சிம்ஹாவின் திருமணம்
நடிகர் பாபி சிம்ஹா 2016ம் ஆண்டு ரேஷ்மி என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதாவது உருமீன் என்ற படத்தில் நடிக்கும் போது காதல் ஏற்பட்டு திருமணம் செய்தனர்.
தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதலில் முத்ரா என்ற மகளும், அடுத்து ஒரு குழந்தையும் உள்ளது.

அவ்வப்போது இவர்களின் புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டு வரும் பாபி சிம்ஹா, தற்போது குழந்தைகளுடன் திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இப்புகைப்படத்தினை அவதானித்த நெட்டிசன்கள் இவருக்கு இவ்வளவு பெரிய பசங்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |