கதறி அழ வைத்த தீபா... உயிர் கொடுத்ததால் இப்படி ஒரு நிலை வந்தது! மில்லியன் இதயங்களை நொறுக்கிய வீடியோ
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தீபா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அந்த போட்டியாளர்களில் ஒருவர் அவரது உருவத்தை கேலி செய்து உள்ளார்.
இதனால் கடும் வருத்தம் அடைந்த தீபா ’உருவத்தை வைத்து கேலி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீ வேறு என்ன சொன்னாலும் நான் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு இருப்பேன் என்றும் கூறினார்.
மேலும் நாங்களும் ஒரு காலத்தில் ஒல்லியாகத் தான் இருந்தோம் என்றும் இரண்டு உயிர்களை நாங்கள் குடும்பத்திற்கு வாரிசாக கொடுத்ததால்தான் இவ்வாறு குண்டாகிவிட்டோம் என்றும் அவ்வாறு உயிர் கொடுத்து தியாகம் செய்த ஒரு தாயை எப்படி உருவத்தை வைத்து நீ கிண்டல் செய்யலாம் என்றும் கூறினார்.
இதற்கு மேல் இதை இவ்வளவு அன்பாகவும் அழகாகவும் உரக்க கூற முடியுமா என தெரியவில்லை…இனியாவது உருவக்கேலிகளையும் தொழில் சார்ந்த கேலிகளையும் தவிர்ப்போம் நண்பர்களே….
— Bala saravanan actor (@Bala_actor) August 26, 2021
தலைவணங்குகிறேன் தாயே #DeepaAkka ??????❤️❤️❤️❤️ https://t.co/MVzH39R8ug
உருவத்தை வைத்து கேலி செய்யும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு மனதில் படும் வகையில் மிகவும் அமைதியாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் தீபா தன்னுடைய கருத்தை எடுத்து வைத்தது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் இந்த வீடியோவுக்கு கமெண்ட் அளித்துள்ள நடிகர் பாலசரவணன் கூறியிருப்பதாவது: இதற்கு மேல் இதை இவ்வளவு அன்பாகவும் அழகாகவும் உரக்க கூற முடியுமா என தெரியவில்லை…இனியாவது உருவக்கேலிகளையும் தொழில் சார்ந்த கேலிகளையும் தவிர்ப்போம் நண்பர்களே…. தலைவணங்குகிறேன் தாயே