ஆடம்பரம் இல்லாமல் மீன் சந்தையில் மகனோடு அருண் விஜய்! ஆட்டோவில் பயணித்த புகைப்படம்
நடிகர் அருண் விஜய் தனது மகனுடன் மீன் சந்தையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
நடிகர் அருண் விஜய்
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்றால் அது விஜயகுமாரும் மஞ்சுளாவும்தான். விஜயகுமாரின் முதல் தாரத்தின் மகன்தான் அருண் விஜய்க்கு சமீபத்தில் படவாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், அஜித் நடிப்பில் வேதாளம் படத்தில் நடித்து மாஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மிஷன் என்ற சீரிஸ் வெற்றிநடைபோடும் நிலையில், இவருக்கு அர்ணவ் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.
இந்நிலையில் அருண்விஜய் செய்த காரியம் ஒன்று இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
மீன் சந்தையில் மகனுடன் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தனது மகனுடன் இணைந்து ஆட்டோவில் சென்று மீன் சந்தையில் அங்கு இருக்கும் மக்களிடம் சகஜமாக பழகி மீன் வாங்கி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தளங்களில் பதிவிடுகையில், "எளிமையான வாழ்க்கை, எளிமையான மக்கள்... இவர்களிடம் இருந்து அதிக அன்பும், அக்கறையும் கிடைக்கிறது" என்று அதில் கூறி இருக்கிறார்.
மேலும் அருண் விஜய் ஆட்டோவில் பயணித்து சாதாரண மக்களிடம் சகஜமாக பேசியது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
இதனை அவதானித்த ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருவதுடன், அருண் விஜய் மகன் இவ்வளவு பெரியதாக வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |