வெறும் 10 நாட்களில் 6 PACK வைச்சிடுவேன்! ரகசியத்தை உடைத்த நடிகர் அர்ஜூன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக ஒரு காலகட்டத்தில் கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகர் அர்ஜூன்.
அவர் தற்போது வில்லனாகவும் சினிமாவில் அசத்தி வருகின்றார். இவருக்கு 63 வயது என்றால் யாராலும் நம்பவே முடியாத அளவுக்கு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதால், இன்றைய காலத்து இளைஞர்களுக்கு கூட இவர் தான் ரோல்மாடல்.

இவரின் இரண்டு மகள்களில் ஒரு மகளுக்கு திருமணம் முடித்துக் கொடுத்துவிட்டார். அடுத்த மகளுக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போகிறது.
ஆனால் அவர் இன்னும் மாறாத இளமையுடனும் கம்பீரமான தோற்றத்துடனும் காட்சியளிக்கின்றார். இதன் பின்னணியில் இருக்கு ரகசியம் குறித்து அவரே ஒரு நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார்.இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் அர்ஜூனின் பிட்னஸ் ரகசியம்
உடற்கட்டு மற்றும் உடல் ஆரோக்கியம், உடலை வசப்படுத்துதல் என்பது ஒரு நீண்ட கால உழைப்பின் பலன் அது குறிகிய காலத்தில் சாத்தியம் ஆகாது. இன்றைய இளைஞர்கள் எல்லாமே தனக்கு வேகமாக நடக்க வேண்டும், அதற்கு குறுகிய கால வழி என்ன என்று தான் தேடுகிறார்கள்.
ஆனால் தொடர்ச்சியும் கன்சிஸ்டன்ஸியும் உடல் ஃபிட்னஸ் விஷயத்தில் மிகவும் இன்றியமையாதது என்கின்றார் அர்ஜூன்.

தனது 15 வயதிலிருந்தே கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளில் தேர்ச்சிப் பெற்றவரான அவர் அந்த அடித்தளமே தற்போதுவரை தன்னை ஃபிட்டாக வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.மேலும் உடல்பயிற்சி செய்யும் போது ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டும்.
உடலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரையில் கடினமாக பயிற்சி செய்ய வேண்டும். முறையான அத்திவாரம் போட்டுவிட்டால் பின்னர் நாம் சொல்வதை உடல் கேட்கும்.

கேப்பங்களியில் ஆரம்பித்து இனிப்பு பொருட்ள் வரை தனக்கு விருப்பமான உணவென்றால் அதை தவிர்க்கவே மாட்டேன் எனக்கூறும் இவர், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுவதாகவும், அது போலவே ஹோட்டல் உணவுகளும் தனக்கு செட் ஆகாது என குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்ஹிந்த் போன்ற படங்களுக்காக மட்டுமல்ல, இப்போதும் கூட தொடர்ந்து ஒரு வாரம் முதல் 10 நாள் உடற்பயிற்சி செய்தால் சிக்ஸ் பேக் தனக்கு வந்துவிடும். அது என் உடலை நான் அப்படி பழக்கப்படுத்தி வைத்திருப்பதால் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |