எனது மகள் மதுவிற்கு அடிமையா? காவல்நிலையம் வந்த நடிகர் அர்ஜுன்
Actor Arjun Police Station: நடிகர் அர்ஜுன் தனது மகளை அவதூறாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றினை வெளியிட்டு, காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
நடிகர் அர்ஜுன்
நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
ஆனால் இந்த திருமணத்திற்கு தம்பி ராமையாவோ, அவரது மகன் உமாபதி, மருமகள் ஐஸ்வர்யா யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் வாழ்க்கையில் பிரச்சனை என்று பேசப்பட்டு வந்தது.
அதாவது உமாபதிக்கும், ஐஸ்வர்யாவிற்கும் இடையே பிரச்சனை என்றும், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என்றும், ஐஸ்வர்யா மதுவிற்கு அடிமையாகியுள்ளதால் உமாபதிக்கு பிடிக்கவில்லை, இதனால் குடும்பத்தில் பிரச்சனை என்று தாறுமாறாக பேசி வந்தனர்.

ஆனால் தம்பி ராமையா உண்மையான காரணத்தையும் வெளியிட்டிருந்தார். அஞ்சனாவின் திருமணத்தின் போது வெளிநாட்டில் இருந்ததாகவும், அவ்வளவு செலவு செய்து மீண்டும் வர வேண்டாம்... இடையில் பார்த்துக் கொள்வோம் என்பதால் தான் திருமணத்திற்கு வரவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அர்ஜுன் தனது மகளை அவதூறாக பேசுபவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்ததுடன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று புகாரும் அளித்துள்ளார்.

அறிக்கையில் கூறியது என்ன?
அர்ஜுன் வெளியிட்ட அறிக்கையில்,அஞ்சனாவின் திருமணத்தை முன்னிட்டு அவருக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் தங்களது அன்பையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது பொதுவெளியில் இதுபோன்ற விடயத்தை பேச வேண்டிய சூழல் ஏற்படும் என்று தான் நினைக்கவில்லை. இளைய மகளின் திருமணத்தின் போது, மூத்த மகள் ஐஸ்வர்யா தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல சர்ச்சையான பேச்சு எழுந்துள்ளது.
ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட விடயங்களில் தலையிடாமல், அவரது தனியுரிமையை மதித்து, இவ்வாறு கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வந்தேன்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்கு பிடித்தபடி வாழும் சுதந்திரமும் உள்ளது. அவர் விரும்பினால், சரியான நேரத்தில் தனது தரப்பிலான விளக்கத்தை அவரே தெரிவிப்பார்.

ஆனால், ஒரு தந்தையாக, எனது மகளையும், அவரது குணத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து ஆதாரமற்ற மற்றும் மிகவும் இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை பார்த்துக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.
பொதுவெளியில் இருப்பதால், யார் வேண்டுமானாலும் கதைகளை புனைந்து பரப்புவதற்கோ, ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்கோ உரிமை இல்லை. எந்தவித ஆதாரமும் இன்றி ஒரு பெண்ணை மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று முத்திரை குத்துவது, ஆதாரமற்ற, இழிவான கருத்துக்களை பரப்புவதைஏற்றுக்கொள்ள முடியாது. சில ஊடங்கள் தங்களது பொறுப்பை தவறாக பயன்படுத்துவது மிகவும் வருத்தமளிக்கிறது.
இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரப்பப்பட்டாலோ அல்லது மேலும் பெரிதாக்கப்பட்டாலோ, அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அர்ஜுன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அறிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளது மட்டுமின்றி தனது மகள் மீது அவதூறு பரப்புவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |