அஜித், ஷாலினியின் திருமண நாள் கொண்டாட்டம்... வெளியான காணொளி
அஜித் மற்றும் ஷாலினி தம்பதிகள் தங்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ள நிலையில், இதன் காணொளி வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அஜித், சினிமா மட்டுமின்றி, கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டு போட்டியிலும் சாதனை படைத்து வருகின்றார்.
அதேபோல், அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விடா முயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று, வசூலில் சாதனை படைத்தது.
தற்போது கார் ரேஸில் பங்கேற்றுள்ள அஜித், அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் கார் பந்தயத்தில் அவர் வெற்றி பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
திருமண நாள் கொண்டாட்டம்
நடிகர் அஜித் அமர்கலம் படத்தில் நடிக்கும் போது அதில் கதாநாயகியாக நடித்த ஷாலினியை காதலித்து 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர ஜோடிக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் தனது 25வது திருமண நாளை கொண்டாடிய அஜித்தின் காணொளி வெளியாகியுள்ளது.
இருவரும் கேக் வெட்டி தங்கள் திருமண நாளை கொண்டாடியுள்ள நிலையில், இக்காட்சி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |