வீங்கிய வயிற்றுடன் 'துள்ளுவதோ இளமை' நடிகர் அபிநய் நடந்தது என்ன?
நடிகர் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த நடிகர் அபிநய் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மருத்துவனையில் அபிநய்
சினிமாவில் தங்கள் நடிப்பு திறமையை காட்டி மக்கள் மனம் கவர்ந்த நடிகர்கள் ஏராளம். சிலர் சிறிய சிறிய வேடங்களில் நடித்து மகவும் பிரபலமானவர்கள் இருக்கின்றனர்.
அப்படி தான் கஸ்தூரி ராஜா இயக்கத்தில், 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் தனுஷ் நடிப்பை ரசிகர்கள் விமர்சித்து அபிநய் இன் நடிப்பை வரவேற்றனர். இந்த படத்தை அடுத்து அபிநய் 'ஜங்ஷன்' படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார்.
இந்த படம் அதிக வரவேற்பை பெறாததால் இவர் கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ ட்ராக்கில் இருந்து நகர்ந்து குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
தமிழில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2014 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் பிஸ்னஸ் மேனாக நடித்திருந்தார்.
இதன் பின்னர் எநத படத்திலும் நடிப்பதற்கு இவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது கல்லீரல் பிரச்சனை ( liver cirrhosis) காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வயிறு வீங்கி எலும்பும் தோலுமாக மாறி உள்ள அபிநயின் சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக 15 லட்சம் ரூபாய் செலவும் அறுவை சிகிச்சையை முழுமையாக முடிக்க 28.5 லட்சம் வேண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
திரை உலகை சேர்ந்தவர்கள் மற்றும் நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இவருக்கு உதவி செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |