மறைந்த நடிகர் அபிநய் கடைசியாக பேசியது - கண்கலங்க வைக்கும் பதிவு
மறைந்த நடிகர் அபிநய் தான் கடைசியாக பேசிய வார்த்தைகள் தற்போது இணையத்தில் அனைவரையும் ஈர்த்துள்ளது.
நடிகர் அபிநய்
சினிமாவில் தங்கள் நடிப்பு திறமையை காட்டி மக்கள் மனம் கவர்ந்த நடிகர்கள் ஏராளம். சிலர் சிறிய சிறிய வேடங்களில் நடித்து மகவும் பிரபலமானவர்கள் இருக்கின்றனர்.
அப்படி தான் கஸ்தூரி ராஜா இயக்கத்தில், 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் தனுஷ் நடிப்பை ரசிகர்கள் விமர்சித்து அபிநய் இன் நடிப்பை வரவேற்றனர்.
இந்த படத்தை அடுத்து அபிநய் 'ஜங்ஷன்' படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார். இந்த படம் அதிக வரவேற்பை பெறாததால் இவர் கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ ட்ராக்கில் இருந்து நகர்ந்து குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார் அபிநய்.

இதன் பின்னர் எநத படத்திலும் நடிப்பதற்கு இவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அபிநய் பொருளாதார பிரச்சினைகளில் சிக்கினார்.
இந்த நிலையில் சமீபத்தில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை செலவுகளை ஏற்க முடியாமல் திண்டாடிய நிலையில், விஜய் டிவி புகழ் பாலா, நடிகர் தனுஷ், சிவகார்த்திக்கேயன் உள்ளிட்ட திரையுலக நண்பர்கள் அவருக்கு நிதியுதவி செய்தனர்.
உயிர் போன தருணம்
இருந்தும் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அபிநய்யை காப்பாற்ற முடியாமல் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
அவருக்கு வயது 43. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு படவிழாவில் பங்கேற்றபோது, தன்னுடைய உடல்நிலை மோசமடைந்து வருவதாக அவர் பேசியிருந்தார்.

மரணத்தை எண்ணிக் கொண்டிருக்கின்றேன் ஆனால் நான் மிகவும் தைரியமாக இருக்கிறேன் என கூறியதுடன் அவர் ம.பி. வை புகழ் பாலாவிடம் தொடர்ந்து பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தான் இறக்கபோவதாக தெரிந்து தன் ஆபத்தான நிலை தெரிந்தும் அதை மிகவும் தைரியமாக எதிர்கொண்ட விதம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
அவரது மறைவுச் செய்தி வெளியாகியவுடன், திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |