நடிகர் அபினய் கடைசி காலம் - சொத்துக்கள் பறிபோன தருணம்: வேதனையின் உச்சம்
44 வயதில் கல்லீரல் பிரச்சனையால் நண்பர் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நடிகர் அபிநய் கடைசி கால நாட்கள் பற்றி பதிவில் பார்க்கலாம்.
நடிகர் அபினய்
ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களை விட பெண் ரசிகர்களின் கனவு கண்ணனாக இருந்தவர் தான் நடிகர் அபிநய். இவர் துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷீடன் நடித்திருந்தார்.
அந்த படத்தின் மூலம் இவருக்கு தனுஷை விட அதிகப்படியான பெண் ரசிகைகள் கிடைத்தனர். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார்.

பல படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த நேரத்தில் தான் ஜங்ஷன் என்ற படம் நடித்தார். அது படு தோல்வியை சந்திக்க, அபினவ் சினிமா கெரியர் தலைக்கீழாக மாறியது. அதன் பின்பு சைடு ரோல், ஸ்பெஷல் கெஸ்ட் ரோல் என நடிக்க தொடங்கினர்.
டப்பிங் ஆர்டிஸ்டாகவும் களம் இறங்கி, நிறைய படங்களுக்கு குரல் கொடுத்தார். நல்ல வருமானம், தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது என கூறப்படுகின்றது.
ஆனால் இவர் தனக்கு வரும் வருமானத்தை தண்ணி போல செலவு செய்வாராம். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து என டூர் போவது, ஆட்டம் பாட்டம் , குடி என பணத்தை சேர்த்து வைக்காமல் செலவு செய்து தீர்த்தாராம். இதற்கு காரணம் சொத்துக்கள் சேர்த்து என்ன நடக்க போகிறது என்பது தான் காரணமாம்.

இவரின் பூர்வீகம் கேரளா. அங்கு நிலம், வீடு, தோட்டம் என வசதியான வாழ்ந்த குடும்பம் தான் அபினவ் குடும்பம். ஆனால் அபிநய் அம்மா உடல் நல பிரச்சனை மற்றும் தனிப்பட்ட பிரச்சனையால் உயிரிழக்க, அபினவ் குடும்பம் சொத்துக்களை அவரின் சொந்தங்கள் எடுத்து கொண்டார்கள் எனப்படுகின்றது.
இதனால் தனது அப்பாவுடன் சென்னைக்கு குடி வந்தார். சில ஆண்டுகளில் அவரின் அப்பாவும் மறைந்து போக, சம்பாதிக்கும் பணத்தை ஜாலியாக செலவு செய்து எந்த சேமிப்பும் செய்யாமல் வாழ தொடங்கினார் அபிநய்.
இதன் பின்னர் மும்பையில் விளம்பரங்களில் நடிக்க சென்ற போது, அபினவுக்கு ஒரு பெண்ணுடன் காதலும் ஏற்பட்டுள்ளது. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர் எனப்படுகின்றது.

இதனை தொடர்ந்து வாழ்க்கையில் பல பிரச்சனைகள் கண்டு தனியாக வாழ்ந்து வந்த அபினவ், 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கபட்டார்.
இதனால் கையில் இருந்த பணம், நண்பர்களிடம் கடன் வாங்கி தனது மருத்துவத்திற்கு செலவு செய்ய தொடங்கினாராம்.
இது மட்டுமல்லாமல் வீடு இல்லாமல், நண்பர்கள் வீடு, லாட்ஜ், டி.நகர் ரூம் போன்ற இடங்களில் தங்கி கடைசி நாளை கழித்தாராம்.
இதுவும் போதாததற்கு தனது அப்பா நினைவாக வைத்திருந்த காரை கூட விற்று தனக்கு வைத்தியம் பார்த்து கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

சமீபத்தில் விஜய் டிவி பாலா கூட அபினவுக்கு பணம் கொடுத்து உதவி இருந்தார். இந்நிலையில் கடைசி 3 மாதங்களாக அபினவ் கோடம்பாக்கத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் வீட்டில் தான் தங்கி இருந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது. உறவினர்கள் யாரும் இல்லாததால் நண்பர்கள், அறக்கட்டளை, விஜய் டிவி பாலா ஆகியோர் இணைந்து அபினவ் இறுதி சடங்கை செய்து முடித்திருக்கின்றனர்.
நடிகர் அபிநய் தனது இளமை காலத்தில் தன் எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் செய்த தவறினால் இறுதி காலத்தில் வேதனையுடன் இறந்தது தற்போது எல்லோரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |