இந்த வலி எனக்கு போகவே இல்ல.. நிறைவேறாத ஆசை- உயிரை கையில் பிடித்தப்படி பேசிய அபிநய்
இறப்பதற்கு முன்னர் அபிநய் கொடுத்த பேட்டியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா பயணம்
தனுஷ் அறிமுகப்படமான “துள்ளுவதோ இளமை” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரமாக அறிமுகமாகியவர் தான் நடிகர் அபிநய்.
இவர், தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாள சினிமாவில் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
அதன் பின்னர், சினிமாவில் வாய்ப்பு குறைய, அவர் சினிமாவே வேண்டாம் என வேறு வேலைக்கு கிளம்பி விட்டார். நீண்ட நாட்களாக சமூக வலைத்தளங்களில் தென்படாத அபிநய், உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு பாலா உதவியாக காணொளி மற்றும் தனுஷ் செய்த உதவிகள் தொடர்பான விவரங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.
நிறைவேறாத ஆசை
இந்த நிலையில், நேற்று முன்தினம் உறக்கத்திலேயே உயிரிழந்தார். இவரின் தாய் இறப்பிற்கு பின்னர் கடுமையான மன உளைச்சால் பாதிக்கப்பட்டு வந்த அபிநய், இறப்பதற்கு முன்னர் கொடுத்த பேட்டியொன்று பகிரப்பட்டு வருகிறது.
அதில், “நான் சினிமாவுக்கு மிக ஆர்வமாக வந்தேன். ஆனால் எனக்கு அதனால் பலன் இல்லை. தனுஷ் உடன் நடிக்கும் பொழுது மிகவும் ஆர்வமாக இருந்தேன். காலங்கள் செல்ல செல்ல சிலரின் சதியால் பட வாய்ப்பு குறைந்தது. என்னிடம் கொடுத்த பணத்தை கூட கேட்கவில்லை. ஆனாலும் எனக்கு யாரும் கோல் செய்யவில்லை.

அதன் பின்னர் டுபாய் சென்று விட்டேன். அங்கு சென்றாலும் என்னுடைய மனம் எல்லாம் இங்கு தான் இருந்தது. சாதிக்க நினைத்தேன் அதுவும் என்னால் செய்ய முடியாமல் போனது. என்னுடைய அம்மா மலையாளி என்பதால் கொஞ்சம் மலையாளம் எனக்கும் தெரியும். விஜய் சேதுபதியுடன் நடிக்கணும். அது என்னுடைய ஆசை.. என சோகமான முகத்துடன் பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |