அதே இளமையுடன் ரசிகர்களை கவர்ந்த நடிகர் அப்பாஸ் - வைரல் கம்பேக் புகைப்படம்
அப்பாஸ், விரைவில் முழு நேரமாக தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுப்பார் என ஆவலோடு உள்ளனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.

நடிகர் அப்பாஸ்
90ஸ்களில் தமிழ் திரையுலகில் பெண் ரசிகைகளின் கனவு கன்னியாக இருந்தவர் தான் நடிகர் அப்பாஸ். இவரருக்கென்று தற்போதும் கூட அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித் போன்ற முன்னணி நடிகர்களடனும் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமன்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.
என்ன காரணம் என்று தெரியவில்லை நடிகர் அப்பாஸ் சமீப காலமாக தமிழ் சினிமாவில் காண முடிவதில்லை.

இப்படி இருக்க பல நாட்கள் கழித்து தற்போது ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ‘ஹேப்பி ராஜ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் கடந்த 2022ம் ஆண்டு, கால் மூட்டு பிரச்சனையால் அறுவை சிகிச்சை பெற்ற செய்திகள் வெளியாகின.
ஒருவழியாக கால் பிரச்சனையில் இருந்து மீண்ட அப்பாஸ் ஹேப்பி ராஜ் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதில் நடிகர் அப்பாஸின் உடலமைப்பே மாறி உள்ளது.
நடிகர் அப்பாஸ் வெளியிட்ட வீடியோவில் “இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது. முயற்சியை கைவிட்டு விடாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதன்படி பார்த்தால் அப்பாஸ் கடினமான பயிச்சிசகளை செய்து வருகிறார்.

இவர் பளு தூக்கி தசை வளர்ச்சிக்கே அதழக முக்கியத்துவம் கொடுத்து உடலமைப்பே மாற்றி உள்ளார்.
தற்போது நியூசிலாந்தில் இருக்கும் அப்பாஸ் விரைவில் சினிமாவில் கம்பேக் கொடுப்பார் என்று ்எதிர்பார்க்கப்படுகின்றது. அவருடைய கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.


| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |