சமந்தாவுடைய கஷ்டம் எனக்கு தெரியும்...மனந்திறக்கும் “கோ” பட நடிகை! அதிர்ந்து போன நெட்டிசன்கள்
பிரபல நடிகை சமந்தா உடல்நிலை சரியில்லாமல் இருப்பது குறித்து பிரபல நடிகை மனந்திறந்து பேசியுள்ளார்.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் “பானா காத்தாடி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா.
இதனை தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற திரைபடங்களின் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகசைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணம் முடிந்து சில காலங்களிலே விவாகரத்து பெற்றார்கள். இது தொடர்பான எந்தவிதமான தகவல்களையும் இவர்கள் இன்று வரை வெளியிடவில்லை.
இந்நிலையில் சமிபத்தினங்களாக மயோசிடிஸ் நோய் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் உடல் இருப்பதால் சினிமா விட்ட விலகுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
பிரபல நடிகை விளக்கம்
இது குறித்து பிரபல நடிகை பியா பாஜ்பாய் மனந்திறந்து பேசியுள்ளார். அதில்,“சமந்தாவின் உடல்நிலை பற்றி எனக்கும் நன்றாக தெரியும்.
நானும் இதுபோன்ற ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளேன். எனக்கும் இந்த நோயின் பாதிப்பு இருந்தது. இதனால் எனக்கு நடக்கக்கூட முடியாத நிலையிருந்தது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவின் நிலைக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.