நெஞ்செரிச்சல் பிரச்சினையால் அவதியா? 5 பொருள் செய்யும் அற்புதம்
நெஞ்செரிச்சல் பிரச்சினை என்பது இன்று பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது.
செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகும் ஹைட்ரோ குளோரிக் அமிலமானது உணவுக்குழாயின் மேல் செல்லும் பொழுது செரிமான பிரச்சினை, நெஞ்செரிச்சல் ஏற்படுகின்றது.
இது மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல், வயிற்றில் எரிச்சல், வாயு, புளித்த ஏப்பம் போன்றவை இதன் அறிகுறியாகும். ஆனால் இவ்வாறான பிரச்சினையை வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
செரிமான பிரச்சினையை எவ்வாறு சரிசெய்வது?
சீரகம் மற்றும் சோம்பு இவற்றினை தண்ணீரில் கொதிக்க வைத்து உணவிற்கு பின்பு பருகினால் நெஞ்செரிச்சல் பிரச்சினை தீரும்.
தண்ணீரில் இஞ்சியை கொதிக்க வைத்து உணவிற்கு பின்பு சாப்பிடலாம். கல் உப்பில் இஞசியை பிரட்டி சாப்பிடும் முன்பு வாயில் போட்டால் செரிமான பிரச்சினை தீரும்.
செரிமான பிரச்சினையை போக்க கிராம்பை வாயில் போட்டு 10 அல்லது 15 நிமிடங்கள் மென்று சாப்பிடவும்.
நன்கு காய்ச்சி ஆற வைத்த பாலை உணவுக்கு முன்பு குடிப்பதுடன், இதில் ஒரு ஸ்பூன் ரோஸ் சிரப் சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தயிர் அல்லது தேங்காய் பாலும் நெஞ்செரிச்சலுக்கு சிறந்ததாகும். மோருடன் துருவிய வெள்ளரிக்காய், சிறிதளவு பிங்க் சால்ட் மற்றும் சீரகத்தூள் சேர்த்து பருகவும். புதினா டீ-யும் பிரச்சினையை போக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |