மொபைலால் வெறிப்பிடித்த மாணவன்... கையைக் கட்டி சிகிச்சைக்கு வந்த தாய்
கல்லூரி மாணவன் ஒருவர் செல்போனில் கேம் விளையாடி மன நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறி பிடித்த மாணவன்
ராணிப்பேட்டை அரக்கோணம் அருகே உள்ள காலிவாரி கண்டிகை பகுதியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவர், சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ படித்து வந்துள்ளார்.
குறித்த மாணவரின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவரது அண்ணன் வெளிநாட்டில் பணியாற்றி அவ்வப்போது பணம் அனுப்பி வைத்துள்ளார்.
மூத்த மகன் அனுப்பும் பணத்தை வைத்து தாயும், குறித்து இளைஞரும் வாழ்ந்து வந்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த மாணவன் செல்போன் மற்றும் கணினியில் விளையாடி வந்துள்ளார்.
இரவும் பகலும் விளையாடிய மாணவர் திடீரென நேற்று வெறி பிடித்தது போன்று பேசியுள்ளார். வீட்டில் தாயையும் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி அடிக்க முயன்ற நிலையில், மாணவனின் கையைக் கட்டி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார் தாய்.
எச்சரித்த மருத்துவர்கள்
மருத்துவமனையில் தனக்கு எதிரே இருந்தவர்களை ஆபாசமாக பேசி தாக்கவும் முற்பட்ட நிலையில், மாணவனுக்கு முதலுதவி மட்டும் அளித்து மேல் சிகிச்சைக்கு கீழ்பாக்கம் மன நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆம்புலன்ஸில் ஏறிய பின்பு தனக்கு எதிரே இருந்தவர்களை அநாகரியமாக பேசி சத்தம் போட்டது வேதனையை அளித்துள்ளது.
பெற்றோர்கள் குழந்தைகளிடம் செல்போனைக் கொடுத்துவிட்டு நீங்கள் நிம்மதியாக இருக்க நினைத்தீர்கள் என்றால், தற்காலிக நிம்மதியை பெறும் நீங்கள் வாழ்க்கை முழுவதும் துயரத்தை சந்திக்க நேரிடும் ஜாக்கிரதை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |