வாழ்க்கையின் வெற்றியை தடுக்கும் தீய பழக்கங்கள்- உடனே மாத்திக்கோங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கியரின் கூற்றுப்படி, குறிப்பிட்ட சிலரின் வெற்றியை அவர்களின் வாழ்க்கை முறை தான் தீர்மானிக்கிறது.
அந்த வகையில் வாழ்க்கையில் நாம் வெற்றிப் பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட சில பழக்கங்களை கைவிட வேண்டும். அப்படியான பழக்கங்களை தொடர்ந்து நாம் பதிவில் பார்க்கலாம்.
வாழ்க்கையின் வெற்றித் தடுக்கும் பழக்கங்கள்
50 ஆண்டுகளுக்கு பின்னர் சிம்மத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?
1. வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் மன அமைதி அவசியம் என சாணக்கியர் கூறுகிறார். மனதில் மகிழ்ச்சி இல்லாத யாரும் வாழ்க்கை வெற்றிப் பெற முடியாது. இவர்களின் வாழ்நாள் முழுவதும் பலவிதமான பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும்.
2. மற்றவர்கள் வாழ்க்கையில் வெற்றிப்பெறுவதை பார்த்து பொறாமையும், வருத்தமும் கொண்டால் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிப் பெறமாட்டார்கள்.
3. ஒழுக்கம் இல்லாதவர்கள் வாழ்க்கையில் வெற்றிப் பெறுவது கடினம். ங்கள் பணிகளில் வெற்றிபெற வேண்டும் என்றால் ஒழுக்கம் அவசியமாக பார்க்கப்படுகின்றது. குணம் இல்லாமல் யாராலும் வெற்றியை அடைய முடியாது.
4. யாராக இருந்தாலும் ஒரு வேலையை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். கவனக்குறைவு இருக்குமாயின் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிப் பெறமாட்டார்கள்.
5. அறிவு எவ்வளவு இருந்தாலும் அனுபவ பாடம் அவசியம். அறிவும் அனுபவமும் இல்லாத ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவது கடினம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |