வலி நிவாரண மாத்திரைகளாக பயன்படும் Aceclofenac + Paracetamol பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Aceclofenac + Paracetamol வலி நிவாரண மாத்திரைகளாக பயன்படுத்தப்படுகிறது.
அதீத வலி, காய்ச்சல் மற்றும் தொற்றுகளால் ஏற்படும் வலியை குணப்படுத்த Aceclofenac + Paracetamol பயன்படுத்தப்படுகிறது.
பக்கவிளைவுகள்
- மயக்கம்
- வயிற்றுப்போக்கு
- குமட்டல்
- அடிவயிற்றில் வலி
- கல்லீரல் நொதி அதிகளவில் சுரத்தல்
மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மருந்துகளை சுயமாக எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே.
Aceclofenac + Paracetamol மாத்திரைகளை உணவுடன் சேர்த்தே எடுத்துக்கொள்ளவும், மீறி எடுத்துக்கொண்டால் வயிற்று வலியால் அவதிப்படலாம்.
மருந்துகளை எடுத்துக்கொண்ட பின்னர் தூக்க கலக்கம் இருப்பதால் வாகனங்களை இயக்க வேண்டாம், ஆல்கஹாலை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
இதனுடன் சேர்த்து acetaminophen நிறைந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
இது அனைவருக்கும் பாதுகாப்பானது என்றாலும் மருத்துவரின் முறையான ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம், தொடர்ந்து இதை பயன்படுத்துவது தீவிரமான பக்கவிளைவுகளை உண்டாக்கக்கூடும்.
வயிற்று வலிக்கு மருந்தாக ஒருபோதும் இதனை எடுத்துக்கொள்ள வேண்டாம், உணவுடன் சேர்த்து மட்டுமே எடுக்கவும், கொழுப்பு மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்கவும்.
வாந்தி தொடர்ச்சியாக இருந்தாலோ, நீரிழப்பு இருந்தாலோ, அடர் நிறத்தில் சிறுநீர் கழித்தாலோ உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
Aceclofenac + Paracetamol மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை உண்டுபண்ணும் என்பதை நினைவில் கொள்ளவும்.