மரக்கட்டைகள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய நபர் - அடுத்து நடந்த அதிர்ச்சி!
மரக்கட்டைகள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய நபருக்கு அடுத்து நடந்த விபரீத வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெட்ரோல் ஊற்றி கொளுத்திய நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒருவர் மரக்கட்டை குப்பைகளாக மலைப்போல் குவித்துள்ளார். அந்த மரக்கட்டை குவியல் மீது ஏறிய அவர் பெட்ரோலை ஊற்றினார்.
கீழே இறங்கி வந்த அவர் தீப்பெட்டியை எடுத்து கொளுத்தி தூக்கிப்போட்டவுடன் ஒரு நொடி திடீரென்று அந்த மரக்கட்டை குப்பைகள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த நபர் தூக்கி எறியப்பட்டார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
this is what happens when you miss physics and chemistry class! pic.twitter.com/vzLCtRMFO4
— clips that go hard (@clipsthatgohard) April 12, 2023