வீட்டில் புது ஏசி வைக்கிறீங்களா? அப்போ இதை கட்டாயம் செய்ங்க
இந்த சுட்டெரிக்கும் கோடை காலத்தில் எல்லோரும் வீட்டில் புது ஏசி வாங்கி வைக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கவனிக்க வேண்டியவை
இந்த சூடான காலத்தில் ஏசி விற்பனை மிகவும் கூடுதலாக காணப்படுகின்றது. இந்த நேரத்தில் எல்லோரும் வீட்டில் ஏசி வாங்கி வைப்பார்கள்.
ஏசியின் வெளிப்புற பகுதி காற்றோட்டத்தை தடை செய்யாதவாறு வைக்க வேண்டும். இதை பால்கனி, கூரை, அல்லது கட்டிடத்தின் வெளிப்புற பக்கத்தில் வைக்கலாம்.
ஏசி வெளிப்புற அமைப்பில், சரியான காற்றோட்டத்தை உறுதி செய்ய அனைத்து பக்கங்களிலிருந்தும் 2 அடி இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும்.
இதை பொருத்துவதற்கு சிறந்த இடமாக இருப்பது வீட்டின் கூரைப்பகுதி தான். இப்படி வைத்தால் வீட்டின் வெளிப்புற பகுதியும் குளிர்ச்சியாக இருக்கும்.
இதனால் உட்புற மற்றும் வெளிப்புற ஏசி சாதனங்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதோடு மின் கட்டணமும் குறைவாகவே வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |