நெடுஞ்சாலை நடுவே அரளிச்செடி வளர்ப்பதற்கு இது தான் காரணமா?
பொதுவாகவே நெடுஞ்சாலையின் நடுவே செவ்வரளிச் செடி வளக்கப்படுவதை அனைவரும் பார்த்திருப்போம்.
இது மிகவும் விஷத்தன்மை வாய்ந்த தாவரமென்பதால் இதனை வீடுகளில் வளர்ப்பது மிகவும் குறைவு. ஆனால் இதனை ஏன் சாலைகளின் நடுவில் வளர்கின்றார்கள் என்று யோசித்திருக்கின்றீர்களா?
உண்மையில் இதனை நெடுஞ்சாலைகளில் வளர்ப்பதற்கு பின்னால் துள்ளியமான அறிவியல் காரணம் இருக்கின்றது.
அறிவியல் காரணம்
செவ்வரளிச் செடியில் உள்ள இலைகள் மற்றும் மலர்கள் காற்றை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. அது காற்றில் உள்ள கார்பன் துகள்களை நீக்கி காற்றை புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டது.
இதனால் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது வாகன புகையையும் தாண்டி சுத்தமான காற்று கிடைக்கின்றது.அதனால்தான் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் அதிகமான அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
நெடுஞ்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுவதனால் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் இருந்து கார்பன் நச்சுக்கழிவு சூழலில் பரவி காற்று மாசுபாட்டை உண்டாக்குகின்றது.
செவ்வரளி தாவரங்கள் காற்று மாசுபாட்டை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவை வறண்ட பகுதியில் வளரக்கூடியது. இதனால் யரும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கவேண்டியது கிடையாது.
மண் அரிப்பை கட்டுப்படுத்துவதிலும், இரைச்சல் மாசுவை கட்டுப்படுத்துவதிலும் இந்த தாவரத்துக்கு முக்கிய பங்குண்டு. இது போன்ற அறிவியல் காரணங்களால் தான் நெடுஞ்சாலைகளில் இந்த தாவரம் வளர்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |