மகா சிவராத்திரி 2024: எந்த ராசியினர் எந்த அபிஷேகம் செய்தால் பலன் கிடைக்கும் தெரியுமா?
ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான் ஜோதி வடிவானவர் இன்று இந்து மதத்தில் குறிப்பிடப்படுகின்றது.
இந்துக்களை பொருத்த வரையில் சிவபெருமான் கடவுள்களின் கடவுள் என கொண்டாடப்படுகின்றார்.
சிவபெருமான் தன்னை வணங்குபவர்களக்கு மாத்திரமன்றி அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்பவர் என இந்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
மகாசிவராத்திரி நாளில் தான் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணமானதாக குறிப்பிடப்படுகின்றது. எனவே தான் இந்த தினம் இத்தனை சிறப்பு மிக்கதாக கருதப்படுகின்றது.
மகாசிவராத்திரி தினத்தில் சிவனை மனதார நினைத்து தனது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என விரதம் இருப்பது இந்துக்களின் வழக்கம். இந்த வகையில் மகாசிவராத்திரி தினத்தில் விரதம் இருப்பதால் சிவபெருமானின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சிவ பெருமான் அபிஷேக பிரியர் எனவும் சொல்லப்படுகின்றது.
எனவே மகா சிவராத்திரி தினத்தில் ஒவ்வொரு ராசியினரும் தங்களின் ராசிக்கு ஏற்ற வகையிலான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வதால் சிவபெருமானின் முழுமையான ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள முடிவதுடன் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.
இந்த வகையில் எந்த ராசியினர் எந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வது சிறந்த பலனை கொடுக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த ராசியினர் எந்த அபிஷேகம் செய்ய வேண்டும்?
மேஷ ராசியினர் மஞ்சள் பொடி கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வதால் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும்.
ரிஷப ராசியினர் திரவிய பொடி கொண்டு மகா சிவராத்திரி தினத்தில் அபிஷேகம் செய்வது நன்மை பயக்கும்.
மிதுன ராசியினர் அரிசி மாவு கொண்டு அபிஷேகம் செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
கடக ராசியினர் இந்த தினத்தில் பால் அபிஷேகம் செய்து சிவனை வழிப்படுவது சிவனின் பூரண ஆசியை கொடுக்கும்.
சிம்ம ராசியினர் தயிர் கொண்டு அபிஷேகம் செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
கன்னி ராசியினர் பஞ்சாமிர்தம் அல்லது தேன் கொண்டு அபிஷேகம் செய்வதால் நன்மை உண்டாகும்.
துலாம் ராசியினர் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும்.
விருச்சிக ராசியினர் பழச்சாற்றில் அபிஷேகம் செய்வதால் நன்மை உண்டாகும்.
தனுசு ராசியினர் விபூதி கொண்டு அபிஷேகம் செய்வது சிவனின் ஆசீர்வாதத்தை கொடுக்கும்.
மகர ராசியினர் பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்வதால் அனைத்து செல்வங்களும் பெருகும்.
கும்ப ராசியினர் சிவனுக்கு மிகவும் பிடித்த வில்வ இலையை கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பு.
மீன ராசியினர் சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்வதால் சிவனின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |