விஷால்- அபிநயா காதல் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவரான நடிகர் விஷாலுக்கும் , நடிகை அபிநயாவிற்குமான காதல் விவகாரம் தொடர்பில் அபிநயா கூறிய பதில் ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.
விஷால் - அபிநயா காதல் விவகாரம்
தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையால் பல கோடி ரசிகர்களுக்கு சொந்தக்காரரான நடிகர் விஷாலிற்கும் வாய் பேச முடியாத நடிகை அபிநயாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில் அபிநயா ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் இந்த விடயம் சினிமா வட்டாரங்களில் மிக வேகமாக பரவியது.
உண்மையை உடைத்த அபிநயா
மேலும் அபிநயா முக்கிய நிகழ்வொன்றில் “மார்க் ஆண்டனி என்ற திரைபடத்தில் தான் நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக நடிக்கிறோம், ஆனால் நிஜத்தில் அப்படி ஒரு உறவு இல்லை” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விரைவில் விஷால் திருமணம் செய்துக் கொள்வார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அபிநயா.