ஒரு கோடிக்கு சொந்தக்காரரான சர்வைவர் வெற்றியாளர்! கடைசி நேரத்தில் உமாபதிக்கு செய்த துரோகம்!
தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளராக விஜயலக்ஷ்மி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கான ஒரு கோடி ரூபாய் பரிசு தொகையை தொகுப்பாளர் அர்ஜூன் வழங்கி வைத்தார்.
இன்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் இறுதி 4 போட்டியாளர்கள் பஞ்சாயத்தில் அர்ஜூனை சந்தித்தனர்.
இறுதியாக நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்ற விஜயலக்ஷ்மிக்கு ஒரு பவர் கிடைத்தது. அதாவது இறுதி போட்டிக்கு மீதி உள்ள நான்கு பேரில் ஒருவரை தெரிவு செய்ய முடியும்.
மிகுதி இருக்கும் இருவருக்கும் போட்டி நடக்கும் வெற்றி பெறுபவர் 3 ஆவது போட்டியாளர் என்று அறிவிக்கப்பட்டது.
உமாபதியிடம் நான் உன்னை தான் தெரிவு செய்வேன் என்று கூறினார். ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் வனிசோவை தெரிவு செய்தது அதிர்ச்சியை கொடுத்தது.
விஜயலக்ஷ்மி செய்த துரோகத்தை ஏற்று கொள்ள முடியாத உமாபதி அடுத்த டாஸ்க்கிலும் தோற்று ஜூரியானார். மூன்றாவது போட்டியாளராக சரண் உள்ளே சென்றார்.
முன்னதாக ஜூரியான அனைத்து போட்டியாளர்களும் தான் இறுதி வெற்றியாளரை தெரிவு செய்ய வேண்டும். சரணுக்கு 4 ஓட்டும் விஜிக்கு 5 ஓட்டும் கிடைத்தது. எனவே விஜயலக்ஷ்மி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.