அபிநய் இல்லன்னு தோனல ! காதலை தூக்கி எரிந்தது ஏன்? விளக்கம் கொடுத்த ஸ்ரீஅஸ்வினி
மறைந்த நடிகர் அபிநய் குறித்து அவரது காதலி என அறியப்படும் துணை நடிகை ஸ்ரீஅஸ்வினி அபிநய்யின் மறைவுக்கு பின்னர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட பதிவு இணைத்தில் வைரலாகியதுடன் பெரும் சர்ச்சசையையும் கிளப்பியது.
நடிகர் அபிநய்
தனுஷ் அறிமுகப்படமான `துள்ளுவதோ இளமை' படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் அபிநய். அதன் பிறகு `ஜங்க்ஷன்', `சக்ஸஸ்', `தாஸ்', `பாலைவன சோலை', `ஆறுமுகம்', `ஆரோகணம்', `வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' எனப் பல தமிழ் படங்களில் நடித்தார்.

மலையாளத்திலும் நடிகர் ஃபஹத் பாசில் ஹீரோவாக அறிமுகமான `கையெத்தும் தூரத்து' படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
அதன் பிறகு சில வருடங்கள் துபாய் சென்று வேலை பார்த்தவர், மீண்டும் சினிமாவுக்கு வந்து `சிங்கார சென்னை' என்ற படத்தில் நடித்தார். ஆனாலும் அது பெரிய அளவில் கை கொடுக்காததால் விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனாலும் நடிப்பினை விடாமல் விளம்பர படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு வராததால் மிகவும் கவலையில் ஆழ்ந்தார். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சினிமாவை விட்டு வெளியே வர விரும்பாத அபிநய், பையா, துப்பாக்கி போன்ற படங்களுக்கு டப்பிங் பேசினார்.
அவரின் அம்மாவின் மறைவுக்கு பின்னர், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அண்மையில் உறக்கத்திலேயே உயிர் நீத்தார்.

காதலை வேண்டாம் என்ற அஸ்வினியின் பதிவு
அதனை தொடர்ந்து நீ சொன்னதை கேட்காமல் இன்று உன் நினைவுகளோடு தவிக்கிறேன் வருகிறாயா என்று. சொல் பேச்சு கேட்காமல் நீ மதுவை நாடி என் மனதை நோகடித்தாய்.
மன்னித்துவிடு எனக்கு மணமாகிவிட்டது என்றேன். இருப்பினும் அழைத்தான் நீ சொன்னதைபோல் குடியால் நோயில் அவதிப்படுகிறேன் என் நிழலைக்கூட நீ பார்க்காதே கவலையும் படாதே இது என்னக்கு ஒரு பாடம் குடியால் வாழ்பவர்களுக்கு என் சாவு ஒரு பாடமாக இருக்கும் என்றான்.

அன்று வராத காதல் இன்று அவன் மீது வந்திருக்க அவனோ காற்றோடு கலந்திருந்தான்" என்று குறிப்பிட்டு துணை நடிகை அஸ்வினி போட்ட பதிவு இணையத்தில் வைரலானது இது குறித்த அஸ்வினி எமது ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ள விடங்களை முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |