குடும்ப கஷ்டத்திற்கு வேலைக்கு போன அப்துல் கலாம்... தன்னம்பிக்கையை வளர்க்கும் பொன்மொழிகள்

abdul kalam abdul kalam quotes
By Manchu Mar 28, 2022 10:18 AM GMT
Report

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியான அப்துல் கலாமின் பொன்மொழிகள் இன்று இளைஞர்களின் சாதனைக்கு ஊக்கமாக இருந்து வருகின்றது.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படுபவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

மாணவர்கள் எளிதில் புரியும் வண்ணம் பல அறிவுரைகளை வழங்கினார். இவரது அறிவுரை அனைத்துமே மாணவர்களை சிந்திக்கச் செய்ததோடு, அதற்கேற்ப நடக்கவும் வைத்தது. மேலும் இவர் தன்னம்பிக்கையூட்டும் பல பொன்மொழிகளை எழுதியுள்ளார்.

அப்துல்கலாமின் பிறப்பு 

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.   

குடும்ப கஷ்டத்திற்கு வேலைக்கு போன அப்துல் கலாம்... தன்னம்பிக்கையை வளர்க்கும் பொன்மொழிகள் | Abdul Kalam Quotes In Tamil

இளமைப் பருவம்

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார்.

பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.  

கடைசி நாமினேஷனில் பிக்பாஸ் கொடுத்த அதிரடி! ஆடிப்போன போட்டியாளர்கள் 

விஞ்ஞானி

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.

பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்.

இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.

இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.   

குடும்ப கஷ்டத்திற்கு வேலைக்கு போன அப்துல் கலாம்... தன்னம்பிக்கையை வளர்க்கும் பொன்மொழிகள் | Abdul Kalam Quotes In Tamil

குடியரசுத் தலைவர்

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது.

மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.  

குடும்ப கஷ்டத்திற்கு வேலைக்கு போன அப்துல் கலாம்... தன்னம்பிக்கையை வளர்க்கும் பொன்மொழிகள் | Abdul Kalam Quotes In Tamil

இறப்பு

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார். பின்பு இவரது சொந்த ஊரான ராமேஷ்வரத்தில் 30ம் தேதி இவரது உடல் அடக்கம் பண்ணப்பட்டது.

குடும்ப கஷ்டத்திற்கு வேலைக்கு போன அப்துல் கலாம்... தன்னம்பிக்கையை வளர்க்கும் பொன்மொழிகள் | Abdul Kalam Quotes In Tamil

அப்துல் கலாமின் பொன்மொழிகள்

  • முடியும் வரை முயற்சி செய்!.... உன்னால் முடியும் வரை அல்ல!..... நீ நினைத்த செயல் முடியும் வரை. 
  • பிரபஞ்சத்தை விட அபார சக்தி கொண்டது உன் மூளை! பிறகென்ன கவலை?.
  • திடமான மனத்துடன் வாழ்ந்தால் என்றென்றும் வளர்ச்சியடையலாம்!.
  • நல்ல எண்ணங்கள் வளர, வளர உள்ளத்தில் வலுவான சக்திகள் உருவாகும்.
  • கடமைகளை வெற்றி, தோல்வி பாராமல் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் புதிய பாதை நமக்காகத் திறந்தே இருக்கும்!.

குடும்ப கஷ்டத்திற்கு வேலைக்கு போன அப்துல் கலாம்... தன்னம்பிக்கையை வளர்க்கும் பொன்மொழிகள் | Abdul Kalam Quotes In Tamil

  • சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தால்தான் சாதனை படைக்க முடியும்.
  • மகத்தானவர் காணும் மகத்தான கனவுகள் எப்போதும் நனவாகின்றன.
  • உறங்கும்போது உருவாவது அல்ல கனவு! உங்களை உறங்கவிடாமல் செய்கிறதே அதுதான் கனவு.
  • வெற்றி என்பது நம் நிழல் போல. வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது அது நம் பின்னால் வரும்!
  • சாவி இல்லாத பூட்டு இருக்காது! தீர்வு இல்லாத பிரச்னையும் இருக்காது!.
  • நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!
  • கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல.. உன்னை தூங்க விடாமல் செய்வதே (இலட்சிய) கனவு
  • நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

குடும்ப கஷ்டத்திற்கு வேலைக்கு போன அப்துல் கலாம்... தன்னம்பிக்கையை வளர்க்கும் பொன்மொழிகள் | Abdul Kalam Quotes In Tamil

  • நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
  • ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல... உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...
  • அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
  • ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.
  • கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.
  • கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், அதை வென்றுவிடலாம்.
  • உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.

குடும்ப கஷ்டத்திற்கு வேலைக்கு போன அப்துல் கலாம்... தன்னம்பிக்கையை வளர்க்கும் பொன்மொழிகள் | Abdul Kalam Quotes In Tamil

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening

மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US