சிரித்து சிரித்து வெறுப்பேற்றிய ஆதி - கடுப்பான நிக்கி - வைரலாகும் வீடியோ
சிரித்து சிரித்து நிக்கியை வெறுப்பேற்றிய ஆதியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆதி - நிக்கி கல்ராணி கல்யாணம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆதி. இவர் முதல்முதலாக ‘மிருகம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவிலும், மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழில் ‘டார்லிங்’ படம் மூலம் அறிமுகமானார்.
இதனையடுத்து, யாகாவராயினும் நாகாக்க, கோ 2, கலகலப்பு 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து ‘யாகாவராயினும் நாகாக்க’, ‘மரகதநாணயம்’ ஆகிய படங்களில் ஜோடி நடித்தனர். இதனையடுத்து, இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன்பு ‘மலுப்பு’ படப்பிடிப்பில் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர்.
அதன் பின்னர் நட்புடன் பழகி வந்தனர். இதன் பின்னர், இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தனர். இவர்கள் காதலித்து வருவதாக சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டனர்.
இதன் பிறகு, நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி சென்னையில் ஒரு ஹோட்டலில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு, மார்ச் 18ம் தேதி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
வைரலாகும் க்யூட் வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நிக்கி பேசும்போதெல்லாம் ஆதி அவரை வெறுப்பேற்றுவது போல் சிரித்து கொண்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் நிக்கி இதெல்லாம் சரி கிடையாது என்று சொல்லியும், அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த நிக்கி சிரித்து விட்டார். பிறகு, இருவரும் சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
தற்போது இந்த க்யூட்டான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்ததும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Find joy in the ordinary…! #HappyWorldLaughterDay pic.twitter.com/AmKOboqTbc
— Aadhi? (@AadhiOfficial) May 7, 2023