திருப்பதியில் கெனிஷா- ரவி: மறைமுகமாக தாக்கும் ஆர்த்தி- என்ன சொல்லிருக்காரு பாருங்க
ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ள ஸ்டோரி ரவி மோகனுக்காக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரவி மோகன் ஆர்த்தி
ரவி மோகனுக்கும் ஆர்த்தி ரவிக்கும் சமீபத்தில் விவாகரத்து என தகவல் வெளியாகி இருந்தது. தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் ரவி மோகன்.
இவரின் மனைவி ஆர்த்தி ரவி. இவர், கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை விட்டு விலகிய பின்னர் ரவி மோகன் என தனது பெயரையும் மாற்றி கொண்டார்.
இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகைகள் ஆர்த்திக்கு ஆதரவாக நின்று ஆறுதல் தெரிவித்து இருந்தனர். ஆர்த்திக்கும் ரவிமோகனுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளது.
இவர்கள் தற்போது ஆர்த்தியுடன் தான் உள்ளார்கள். ரவி மோகன் ஆர்த்தியை பிரிந்ததில் இருந்து பாடகி கெனிசாவுடன் ஊர் சுற்றி போஸ்ட் செய்து வருகிறார். இதை ஒரு வேலையாக செய்து வருகிறார்.
நேற்றைய தினம் கூட திருப்பதிக்கு பாடகி கெனிசாவுடன் ரவி மோகன் சென்ற புகைப்படம் வைரலாகி இருந்தது. இதனை தொடர்ந்து ரவி மோகனை பற்றிய பல செய்திகள் பரவி வருகின்றது.
இந்த நிலையில் ரவி மோகன் வாழ்க்கையில் ஏதாவது சம்பவம் நடந்தாலே ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை இணையவாசிகள் தேட ஆரம்பித்து விடுகிறார்கள்.
அப்படி தான் தற்போது ஆர்த்தி தனது இன்ஸ்டாவில் போட்ட ஸ்டோரி இணையவாசிகளிடம் வைரலாகி ஒரு வேளை இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றது.
ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
நேற்றைய தினம் ரவி மோகனும் பாடகி கெனிசாவும் திருப்பதியில் தரிசனம் செய்த புகைப்படம் ஒன்று வைரலாகி வந்தது. இதனை தொடர்ந்து ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராமில் இணையவாசிகள் தேடுதல் போட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பகிர்ந்துள்ள ஸ்டோரி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆர்த்தி ரவி தனது ஸ்டோரியில், " you can't fool god. you might fool others . you might fool yourself.
but you can't fool god" எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, " கடவுளை ஏமாற்ற முடியாது. மற்றவர்களை ஏமாற்றலாம். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம்.
ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்வது போல இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
