நான் இப்படி இருப்பதற்கு காரணமே என்னுடைய மனைவி ஆர்த்தி தான்! நடிகர் சிவகார்த்திகேயன்
சினிமாவில் சாதனைகள் பல புரிய தன்னுடைய மனைவி தான் காரணம் என உருக்கமாக பேசியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். பின்னர் மிமிக்ரி போன்ற தனித்திறமை கொண்டு மேடை நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர்.
இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர்.
பின்னர் தனது மிமிக்ரி திறமையை கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதே தொலைக்காட்சியில் பணியாற்றி புகழ் பெற்றார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளான 'சூப்பர் சிங்கர்', 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி தனது திறமை மூலம் மக்களின் கவனத்தை பெற்று பிரபலமானவர்.
2013ம் ஆண்டு இவரது நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்து ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக உருவெடுத்துள்ளார்.
மனைவி தான் காரணம்
அந்த வகையில் தான் தற்போது வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பதற்கு மனைவி ஆர்த்தி தான் காரணம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும் போது 'வாழ்கையில் நான் எதை பத்தியும் யோசிக்கவே இல்லை... என் வாழ்க்கை ஒரு விறுவிறுப்பில்லாமல் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தது.
நான் தனியாக இருக்கும் போது எதை பற்றியும் யோசிக்கவில்லை. ஆனால் என் வாழ்க்கையில் ஆர்த்தி வந்த பிறகு தான் அவங்களுக்காக மாறினேன்.
அதன் பிறகு தான் எனக்கு பொறுப்புக்களை புரிந்து செயற்பட்டேன். அவங்க எதை கேட்டாலும் வாங்கி கொடுக்கணும், ஒரு மாசத்திற்கு ஒரு லட்சம் சம்பாதிக்கணும், அப்படி எல்லாம் நினைத்து திட்டமிட்டு ஆர்வமாக வேலை செய்தது தான், இன்று என்னை மாற்றி இந்த அளவிற்கு கொண்டு வந்து இருக்கிறது.
அவர் வந்த பின் என்னுடைய வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயத்தையும் அவர் தான் பார்த்து கொள்கிறார். எனக்கு பாதியளவில் இல்லை முழுமையாகவே எல்லா விதத்திலும் அவர் சப்போர்ட் ஆக இருக்கிறார்.' என சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |