சூர்யாவை பற்றி ஜோசியர் என்ன சொன்னார்? தந்தை சிவகுமாரின் பேட்டி
நடிகர் சூர்யாவின் வாழ்கையை பற்றி ஜோசியர் ஒருவர் கணித்த விஷயத்தை சிவகுமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் சூர்யா. இவர் 2006 ம் ஆண்டு ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அழகான குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் சூர்யா நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
சூர்யாவின் அப்பா சிவகுமார் அளித்துள்ள பேட்டியில், சூர்யா சிறு வயதில் இருந்தே அமைதியாக இருப்பாதால் அவரை ஜோசியர் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார்.
அவர் சூர்யாவின் வாழிக்கை பற்றி கூறியது அனைத்தும் நடந்துள்ளது என கூறி கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், சூர்யா சிறு வயதில் இருந்தே அமைதியாக இருப்பார். எந்த விஷயத்திலும் அவருக்கு ஆசை என்பது இல்லை. அதனால் அவரை ஒரு ஜோசியரிடம் நான் அழைத்து சென்று அவரின் ஜாதகத்தை பற்றி கேட்டேன்.
ஜாதக்தை பார்த்த ஜோசியர் இவர் சினிமாவில் தான் வேலை செய்வார் என்றார். அவர் இப்படி கூறியதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஏனென்றால் சூர்யா அவ்வளவு பெரிதாக யாரிடமும் பேச்சு கொடுக்க மாட்டார்.
இதனையடுத்து நான் ஜோசியரிடம் அவர் என்னவாக வருவார் என்று கேட்டேன். அவர் கூறினார் இவர் இவரின் முகத்தை வைத்து பணம் சம்பாதிப்பார் என்றார்.
நான் நடிப்பா? என்று கேட்டேன் ஆம் என கூறினார். பின்னர் அவர் நடிப்பில் உங்களை விட பெரிய பெயர் வாங்குவார். விருதுகள் அவரை தேடி வந்து குவியும்.
அதிக சம்பளம் வாங்குவார்.என கூறியதுடன் இவர் காதல் திருமணம் தான் செய்து கொள்வார் என கூறினார்.
ஜோசியர் சொன்னது போலவே சூர்யாவின் வாழ்க்கையில் அனைத்தும் அப்படியே நடந்தது. இதன் பின்னர் தான் நாங்கள் ஜோசியரை தேடிச் சென்று, வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்தோம் என தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |