குழந்தையாகவே மாறிய ஆர்த்தி ரவி: மகன் பிறந்தநாளில் வெளியிட்ட உருக்கமான பதிவு
விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடும் பதிவுகள் இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.
ஆர்த்தி ரவி தற்போது தனது இளைய மகன் அயான் பிறந்தநாளுக்கு சுற்றுலா சென்று வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ரவி மோகன்- ஆர்த்தி ரவி
நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை தான் அண்மை காலமாக இணையத்தில் பயங்கர வைரலாக பேசப்பட்டது.
ரவி மோகன் ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ரசிகர்களை இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது
அதனை தொடர்ந்து குடும்ப பிரச்சினையை மாறி மாறி அறிக்கை வெளியிட்டு பொது பிரச்சிகையாகவே மாற்றினார்கள். மேலும் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வெளி நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதும் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது.
அறிக்கை வெளியிடக்கூடாது என நீதிமற்றம் உத்தரவு பிறப்பித்தன் பின்னரே இந்த பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. தற்போது இருவரும் அவர்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் மற்றும் நடிகர் ரவி மோகன் அண்மையில் இலங்கை சென்ற புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.
ஆனால் தற்போது இது குறித்து ஆர்த்தி ரவி கண்டுக்கொள்ளாமல் தனது வாழ்க்கை மற்றும் தனது மகன்களின் மகிழ்சி என அதில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் இளைய மகள் அயான் பிறந்தநாளுக்கு சுற்றுலா சென்று, பாண்டாக்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு மகனுக்கு சில அறிவுறைகளை கூறியதுடன், பாண்டாக்கள் மூங்கிலை நேசிப்பதை விட உன்னை நான் அதிகமான நேசிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அயானு... என குறிப்பிட்டு புகைப்படங்களுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |