ஆர்த்தி ரவி மனு தாக்கல் - பாடகி கெனிஷாவுக்கு ஐகோர்டின் புதிய உத்தரவு!
ஆர்த்தி ரவி தாக்கல் செய்த மனு குறித்து தற்போது ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரவி மோகன்
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து காதல் மன்னனாக உருவெடுத்தவர் தான் நடிகர் ஜெயம் ரவி.
தற்போதும் கூட இவரது நடிப்பில் ‘கராத்தே பாபு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனிடையே, கடந்த ஆண்டு, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய ரவி மோகன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் ரவி மோகன் மிகவும் நெருக்கமாக பழகும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பல விமர்சனங்களை வாங்கி வந்தது.
இந்நிலையில், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ரவி மோகனின் தோழியான பாடகி கெனிஷா தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஆர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதற்கு தற்போது ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐகோட் உத்தரவு
தற்போது ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழும் நடிகர் ரவி மோகன் விவாகரத்து கோரிய வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே ரவி மோகனின் தோழி பாடகி கெனிஷா தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்து வருவதாக ஆர்த்தி வழக்கு வழக்கு தொடர்ந்தார்.
ஆர்த்தி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க பாடகி கெனிஷாவுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.