வாத்தி கம்மிங் பாடலுக்கு மாஸாக என்ட்ரி கொடுத்த டைட்டில் வின்னர் ஆரி; இணையத்தில் லீக்கான கொண்டாட்ட வீடியோ
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்று ரசிகர்களிடையே அன்பை பெற்றவர் தான் நடிகர் ஆரி. இவரின், நல்லகுணத்துக்கு ஏற்றவாறே கோடிக்கணக்கான ஓட்டுகள் விழுந்து வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்பு வெற்றி கொண்டாட்டம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கான ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
அப்போது, வெற்றியாளரான ஆரி செம மாஸாக வாத்தி கம்மிங் பாடல் பின்னணியில் ஒலிக்க பட்டு வேட்டிசட்டையில் பைக்கில் ஆடியவாறு என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் இணையத்தில் வெளியாக அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
#Aari Mass Entry In #BiggBossKondattam pic.twitter.com/kRcK233b3X
— shobi (@shobana40502466) January 28, 2021