ஆரியை ஜெயிக்க வைத்த குழந்தை: கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்து போன சோகம்! கண்ணீரில் ஆரி
தன்னை வாக்களித்து வெற்றிபெற செய்த சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ள நிலையில், ஆரி பதிவிட்டுள்ள டுவிட் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பிக்பாஸில் கலந்து கொண்டு முதல் இடத்தினை வென்ற ஆரி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றவர்.
இவர் பிக்பாஸில் இருந்த போது ருத்ரா என்ற குழந்தை இவரது தீவிர ரசிகையாக இருந்துள்ளதுடன், தனது வாக்குகள் அனைத்தும் ஆரிக்கே செலுத்தியதோடு, தற்போது ஹாட்ஸ்டாரில் சென்று ஆரிக்காகவே மீண்டும் பிக்பாஸினை அவதானித்து வந்துள்ளார்.
குழந்தை ருத்ராவுக்கு முதுகு தண்டுவடத்தில் அரிய வகை பாதிப்பு தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆரி வெளியிட்டுள்ள டுவிட்டில், "குழந்தை ருத்ராவின் அன்பு எனக்கு கிடைத்த வரம். குழந்தையின் மறைவு செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உன் சுவாசம் நின்று விட்டாலும், என் சுவாசம் உள்ளவரை நினைவில் கொள்வேன்" என நடிகர் ஆரி உருக்கமாக பதிவிட்டு இருப்பது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
குழந்தை ருத்ராவின் அன்பு எனக்கு கிடைத்த வரம். குழந்தையின் மறைவு செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.
— Aari Arjunan (@Aariarujunan) July 15, 2021
அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்?
உன் சுவாசம் நின்று விட்டாலும், என் சுவாசம் உள்ளவரை நினைவில் கொள்வேன் ?#Ripruthtra pic.twitter.com/UOwTomZ1oP
ஆரியின் அந்த ட்வீட்டுக்கு கீழே ருத்ராவின் அம்மா சந்தியா போட்டுள்ள ட்வீட் மேலும் ரசிகர்களை உருக்கி வருகிறது. அவ உங்களோட தீவிர ரசிகை. உங்களை நேரா பார்த்திருந்தா சந்தோஷமா இருந்திருப்பா.. இப்ப சொர்க்கத்துல ஹேப்பியா இருப்பா என ருத்ராவின் அம்மா போட்டுள்ள ட்வீட்டுக்கு கீழ் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.