ஆரி, அனிதா, சனம் மூன்று பேருக்கும் இப்படியொரு ஒற்றுமையா? உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் பேராதரவினைப் பெற்று வெற்றி பெற்ற ஆரிக்கும், சனம் மற்றும் அனிதாவிற்கும் இப்படியொரு ஒற்றுமையா என்று அவர்கள் பிறந்த திகதி வியக்க வைத்துள்ளது. பிக்பாஸில் ஆரி, பட்டத்தை வென்ற போது அனிதா மற்றும் சனம் ஷெட்டி இருவரை தவிர யாரும் பெரிதாக உற்சாகமடையவில்லை.
அதே போல பிக் பாஸ் வீட்டில் இருந்த போல ஆரி, சனம் மற்றும் அனிதா மூவரும் ஒரு குழுவாக தான் இருந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சம்பத் தனது ரசிகர்கள் அனுப்பி இருந்த சில மெசேஜ்களுக்கு பதில் அளித்துள்ளார்.
அந்த வகையில் ரசிகர் ஆரி உங்களிடம் உண்மையாக தான் இருந்தார். பிக்பாஸ் உள்ளே நடந்த அனைத்தையும் மறந்து நீங்கள், சனம், ஆரி ஆகிய மூவரும் நல்ல நண்பர்களாக இருங்கள் என்று மெசேஜ் அனுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த அனிதா சம்பத், ஆமாம், ஆரி மற்றும் சனம் எப்போதும் என்னுடைய நல்ல நண்பர்களாக இருப்பார்கள் என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் என்று ஆரி, சனம் ஆகிய மூவரின் பிறந்தாநாளில் இருக்கும் ஒற்றுமை குறித்து அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதாவது இவர்கள் மூவரும் 12 ஆம் தேதியில் பிறந்தவர்களாம். அதே போல இவர்கள் மூவரின் பிறந்த தினம், மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டினால், 29,30,31 என்று தொடர்ச்சியான எண்கள் தான் வருகிறது. இதனை கையில் எடுத்துக்கொண்ட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.