ஆட்டிப்படைக்கும் சனியும் அடங்கி போகின்றார்! அள்ளி கொடுக்கும் குரு! யார் யாருக்கெல்லாம் ராஜயோகம்?
ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரியன் மிதுன ராசியில் பயணம் செய்யும் இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
துலாம்
சுக்கிரபகவானை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, ஆனி மாதத்தில் சூரியன் சஞ்சாரம் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் இந்த மாதம் வெற்றிகளும் சந்தோஷமும் தேடி வரும்.
புதன் வக்ரமாக உள்ளதால் செலவுகள், பணப்பற்றாக்குறை ஏற்படும். கடந்த மாதத்தை விட இந்த மாதம் உங்களுக்கு அமோகமாக இருக்கும்.
வருமானம் அதிகரிக்கும் பழைய நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். அர்த்தாஷ்டம சனி உள்ளதால் அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பிள்ளைகளின் நட்பு வட்டத்தையும் கண்காணிக்கவும்.
கோர்ட் கேஸ் வழக்குகள் சுமூகமாக முடியும். பத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைவதால் புதிய தொழில் தொடங்கலாம்.
வீடு கட்டுவதற்கு லோன் வாங்கலாம். சுப காரியம் கைகூடி வரும். மகளின் திருமணம் விசயமாக பேசலாம். உங்களுக்கு வெற்றிகள் தேடி வர கால பைரவரை வணங்கவும்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செல்வதால் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சனிபகவான் வக்ர பார்வையால் பார்வையிடுகிறார். தொடர்ந்து ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வீடு வாங்க முயற்சி செய்யலாம். இடமாற்றம் நன்மையைத் தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் இருந்த பகைமை நீங்கும். மகளுக்கு திருமணம் கைகூடி வரும்.
ஸ்ரீ சக்ரத்தாழ்வாரை வணங்குங்கள் மிளகு தானமாக கொடுங்கள்.
தனுசு
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்வையிடுவதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் தடைகள் உடைபடும்.
ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் புதன் வக்ரமடைந்து சஞ்சரிப்பதால் பங்குச்சந்தையில் முதலீடுகளைத் தவிர்க்கவும். இந்த மாதம் முற்பகுதியில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வெற்றிகள் உண்டு.
செவ்வாய் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் கவனம் தேவை. மாத பிற்பகுதியில் சுக்கிரன் செவ்வாய் உடன் இணைந்து எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம்.
பணம் நகைகளை பத்திரமாக வைத்திருக்கவும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டு. அனுமன் வழிபாடு மனதில் சந்தோஷத்தைக் கொடுக்கும். தடைகள் நீங்கும் காரிய வெற்றி உண்டாகும்.
மகரம்
சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார். எதிர்ப்புகளை தாண்டி வெற்றி கிடைக்கும்.
கோர்ட் கேஸ் வழக்குகள் சாதகமாக முடியும். வெற்றிகள் தேடி வரும் மாதமாக உள்ளது. சுக்கிரன் பயணம் செலவைத் தரும். சுக்கிரன் செவ்வாய் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.
தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பங்குதாரர்களுடன் மோதல் வரலாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்த்து விடவும். குரு சாதகமாக பயணம் செய்வதால் எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக முடியும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
தடைகள் நீங்கி வெற்றி பெறுவீர்கள். ஆனி மாதம் இன்பமயமான மாதமாக மாறும்.
கும்பம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சொத்து விசயங்கள் நல்ல விதத்தில் முடியும்.
பூர்வீக சொத்துக்களை பத்திரப்பதிவு செய்வீர்கள். சூரியன் 5வது வீட்டில் அமர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்கவும்.
பிரபல யோகாதிபதிகள் சிறு சிறு பண இழப்புகள் ஏற்படும். பணம் ஜாமீன் கையெழுத்து போட்டு சிக்கிக் கொள்ள வேண்டாம். நெருங்கியவர்கள் விலக வாய்ப்பு உண்டு.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சில நேரங்களில் மனதில் சில ஆதங்கம் வந்து போகும். வெளிப்புற உணவுகளை தவிர்த்து விடவும். வேற்று இனத்து காரர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த மாதமாக ஆனி மாதம் அமைந்துள்ளது.
மீனம்
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த மாதம் சூரியன் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார்.
பழைய கடன் பிரச்சினைகள் நீங்கும். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறு வீர்கள் தடைகள் விலகும். வேற்று இனத்தை சார்ந்தவர்கள் உதவி செய்வார்கள். சுக்கிரன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.
சகோதரிக்கு திருமணம் கைகூடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
பழைய கடன்கள் வசூலாகும். பயம் நீங்கி தைரியம் கை கூடி வரும். நீண்ட நாள் நினைத்திருந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாழக்கிழமை குருபகவானை வணங்க கனவு நனவாகும்.