திருமணத்திற்கு முன்பே ஹனிமூன் சென்ற பிக்பாஸ் பிரபலங்கள்! குதூகலத்துடன் வெளியிட்ட வீடியோ காட்சி
பிரபல பிக்பாஸ் ஜோடிகளான நடிகை பாவனி - அமிர் இருவரும் மலேஷியாவில் குதூகலமாக சுற்றித்திரியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரைக்கு அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் “சின்னதம்பி” என்ற சீரியலின் மூலம் பாவனி சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
இவரின் யதார்த்தமான நடிப்பால் முதல் சீரியலிலே பிரபலமாகிவிட்டார். இதனை தொடர்ந்து இவர் காதல் திருமணம் செய்துக் கொண்டு நடிப்பதிலிருந்து சற்றுவிலகியிருந்தார்.
திடீரென இவரின் கணவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அதிக மனஉளைச்சலுக்கு ஆளான பாவனி மீடியாத்துறையை விட்டே விலகிவிட்டார் என்றே கூற வேண்டும்.
பிக் பாஸ் பயணம்
இதன் பின்னர் இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 ல் கலந்து கொண்டு 3 இடத்தை பிடித்துக் கொண்டார்.
மேலும் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போது வால்ட் கார்ட் என்றி கொடுத்த பிரபல டான்ஸர் அமீர் பவானி மீது காதலித்து வந்தார்.
ஆரம்பத்தில் பாவனி அமீரின் காதலை மறுத்தாலும், இருவரும் “பிபி ஜோடிகள்” என்ற நிகழ்ச்சி மூலம் இணைந்தார்கள்.
இவர்களின் காதல் பயணத்தை முடித்து விட்டு விரைவில் திருமணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைரலாகும் வீடியோக்காட்சி
இந்நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சிக்காக மலேஷியா சென்ற பாவனி - அமீர் அங்கு குதூகலமாகச் சுற்றித்திரியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு முன்பே ஹனிமூனா? என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
Upclose with #AmirADS and #Pavni #VijayTelevision #starudanorunaal #PavMir https://t.co/EzmvGH1ObB
— Sivaranjani (@Siva11335577) December 14, 2022
மேலும் இவர்களுடன் பிரபல தொகுப்பாளினி பிரியங்காவும் சென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.