ஆடிப்பெருக்கு: செல்வம் சேரும் நாளில் மறக்காமல் இதை செய்திடுங்கள்
ஆடி மாதத்தின் 18ம் நாளை ஆடிப்பெருக்கு என குறிப்பிடுகிறோம், இந்நாளில் நாம் எதை செய்தாலும் பன்மடங்கி பெருகும் என்பது ஐதீகம்.
ஆடிப்பெருக்கு அன்று செய்யும் காரியங்கள் நமக்கு பல மடங்கு பலனை கொடுக்கும். இது தெய்வங்களின் ஆசியை மட்டுமின்றி, முன்னோர்களின் ஆசியையும் பெறுவதற்குரிய நாளாக கருதப்படுகிறது.
இந்த ஆடி மாதத்தில் நாம் என்ன செய்தாலும் அது இறைவனை சென்றடைவதுடன் நமது வேண்டுதலும் நிறைவேறும்.
ஆடி பெருக்கு
இந்த ஆடி பதினெட்டாம் பெருக்கில் முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதற்கு விளக்கேற்றி நெய்வேத்தியம் படைத்து வீட்டில் உள்ள அம்மன் சாமி படத்திற்கு முன் கற்பூரம் காட்டி வழிபாடு செய்தால் அது மிகவும் நன்மை தரும்.
திருமணமானவர்கள் புதிதாக தாலி கயிறு மாற்ற விரும்பினால் இந்த ஆடி பெருக்கு நாளில் மாற்றி கொள்வது நன்மை தரும். இதனால் மாங்கல்யத்திற்கு பலத்தை கொடுக்கும்.
இந்த மாங்கல்யத்தை மாற்றிய பின் உங்களால் முடிந்த மூன்று அல்லது ஐந்து சுமங்கலி பெண்களுக்கு வளையல் குங்குமம் மஞ்சள் பூ வாங்கி கொடுக்க வேண்டும். இந்த நாளில் அரிசி உப்பு வத்தல் போன்றவற்றை வைத்தால் இந்த பொருட்கள் எப்போதும் நமது வீட்டில் குறைவில்லாமல் இருக்கும்.
இந்த நாளில் இருந்து செல்வம் பெருக வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பொருட்களை வாங்கி வைக்கலாம். மஞ்சள் கயிறு மாற்ற நினைப்பவர்கள் ஆடிப்பெருக்கு 18 அன்று சனிக்கிழமை நல்ல நேரம் 7.45 முதல் 8.45 வரை மஞ்சள் கயிறு மாற்ற வேண்டும்.
இதை தவிர மதிய நேரங்களிலோ மாலை நேரங்களிலோ கயிறு மாற்ற கூடாது. அம்பாளுக்கு வேப்பிலை மாலை கட்டி, சர்க்கரை பொங்கல் போன்ற இனிப்பு செய்து வைத்து படைத்து வழிபடலாம். இதை தவிர முழு பக்தியுடன் இந்த நாளில் நீங்கள் இறைவனை வழிபடும் போது அது பல ஜென்ம பலனை தரும் என்பதும் ஐதீகம்.
Chanakya Niti: நாயின் இந்த 4 குணங்கள் இருக்கும் ஆண்கள் கிடைத்தால் அதிர்ஷ்டமாம்.. உங்க கணவரிடம் இருக்கா?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |