ஆடிப்பெருக்கு: கோடி நன்மைகள் வந்து சேர என்ன செய்ய வேண்டும்
தமிழர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று ஆடிப்பெருக்கு, ஆடி மாதத்தின் 18ம் நாளில் இது கொண்டாடப்படுகிறது.
பருவமழை தொடங்கும் காலத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும் போது, ஆறு மற்றும் குளங்களில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
இன்று செய்யப்படும் செயல்கள் பல்கிப் பெருகும் என்பது நம்பிக்கை, குடும்பத்தில் உள்ளவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஒன்றிணைந்து இறைவனை வணங்கினால் நல்லது நடக்கும்.
குறிப்பாக நீர்நிலைகளுக்கு சென்று மா இலையில் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள், புதிதாக திருமணமான பெண்களின் கணவன்மார்களை அழைத்து புதிய ஆடைகள், பரிசுகள் வழங்குவார்கள்.
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நீர் ராசிகளில் பிறந்தவர்களும், ரிஷப ராசிக்காரர்களும் ஆடி 18 அன்று வழிபாடு செய்தால் யோகம் கிடைக்கும்.
இன்றைய நாளில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விதைகளை விதைத்து பல்கிப்பெருக நதி, ஆறுகளை கடவுளாக பாவித்து வணங்குவார்கள், நெல், கரும்பு விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்யலாம், இதையே தான் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியில் குறிப்பிடுகிறார்கள்.
திருமணமாகாத கன்னிப் பெண்கள், விரைவில் திருமணம் கைகூட காவிரித்தாயை வணங்குவது நம்பிக்கை, குழந்தை இல்லாத பெண்கள் பலவகையான உணவுகளுடன் வளையல்கள் கொண்டு பூஜை செய்தால் கர்ப்பம் தரிப்பார்கள் என்பது ஐதீகம்.
புதுமண தம்பதிகள் மனதார பூஜை செய்தால் நீண்ட காலம் சந்தோஷமாக குடும்பத்தில் பிரச்சனைகள் இன்று வாழ்வார்கள்.
புதுமணப்பெண்களும், திருமணமானவர்களும் புதிய மஞ்சள் கயிற்றை மாற்றி போடுவதும் வழக்கம், இப்படி செய்தால் கணவன்களின் ஆயும் நீடிக்கும்.
இன்றைய நாளில் செய்யும் செயல்கள் பல்கிப்பெருகும் என்பதால் பலரும் தங்கம், வெள்ளி என புது நகைகளை வாங்கி வீட்டின் பீரோவில் வைப்பதும் வழக்கமே!!!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |