ஆச்சி மனோரமாவின் மகனை பார்த்ததுண்டா? வைரலாகும் குடும்ப புகைப்படம்
ரசிகர்களால் ஆச்சி என்று அழைக்கப்பட்ட மனோரமாவின் மகனையும், அவரது குடும்ப புகைப்படத்தினையும் பார்க்கலாம்.
ஆச்சி மனோரமா
இந்திய சினிமாவில் பழம்பெரும் நடிகையாக ஜொலித்தவர் தான் ஆச்சி மனோரமா. தஞ்சாபூர் மாவட்டத்தில் பிறந்த இவரின் உண்மையான பெயர் கோபி சாந்தா.
சிறு வயதிலிருந்து நாடகத்துறையில் அதிகமான நாட்டம் கொண்ட இவர் தனது நடிப்பினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் நெகிழ வைத்தார்.
இவரது நடிப்பிற்கு தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என கிடைத்தது. கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றார்.
எஸ்.எம்.ராமநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதுடன் இந்த தம்பதிகளுக்கு பூபதி என்ற மகனும் உள்ளார்.
மகனின் குடும்ப புகைப்படம்
நடிப்பில் அரசியாக இருந்த மனோரமா 2015ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஆனால் இவர் விட்டுச்சென்ற இடத்தினை நிரப்ப தற்போது வரை எந்த நடிகைகளும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் மனோரமா தனது மகன், மற்றும் அவரது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.