A2 நெய் என்றால் என்ன? நாம் தினமும் சாப்பிடும் நெய்யை விட என்ன வித்தியாசம்?
A2 நெய் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சந்தையில் A1 மற்றும் A2 என பெயரிடப்பட்ட இரண்டு வகையான நெய் கிடைக்கிறது. A2 மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. A2 நெய் என்றால் என்ன, அதன் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
A2 நெய்
நீங்கள் கடைகளில் நெய் வாங்கும் போது இதில் A1 மற்றும் A2 என்று எழுதப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அனால் அதில் A2 நெய் மிகவும் ஆரொக்கியமானது என்று விற்கப்படுகின்றது.
இந்த நெய்யின் விலை சாதாரண நெய்யை விட மிக அதிகம். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இணைந்த லினோலிக் அமிலம் (CLA), வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் E மற்றும் வைட்டமின் K போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
A2 நெய் என்றால் என்ன?
'A2' நெய்யை விற்கும் நிறுவனங்கள் இது ஆரோக்கியமானது என்று கூறுகின்றன. சாதாரண நாட்டு நெய் ஒரு கிலோ ரூ. 1000க்கும், 'A2' நெய் ஒரு கிலோ ரூ.
3000க்கும் கிடைக்கிறது. பால் தயாரிப்பு நிறுவனங்களின் கூற்றுப்படி, A2 நெய் என்பது நாட்டு மாடுகளின் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
இதில், ஒரு சிறப்பு இன பசுவின் பால் சேகரிக்கப்பட்டு, பால், தயிர், நெய் தயாரிக்கப்படுகின்றன. A2 பீட்டா-கேசின் புரதம் இயற்கையாகவே இந்த நெய்யில் காணப்படுகிறது.
இந்த புரதம் சாதாரண பாலில் காணப்படும் புரதத்திலிருந்து வேறுபட்டது மற்றும் ஜீரணிக்க எளிதானது. இந்த புரதம் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
A1 நெய்க்கும் A2 நெய்க்கும் என்ன வித்தியாசம்?
நிறுவனங்களின் கூற்றுப்படி, A1 மற்றும் A2 நெய் அல்லது பிற பால் பொருட்களில் பீட்டா-கேசின் புரதத்தில் வேறுபாடு உள்ளது. இது பாலில் காணப்படும் ஒரு முக்கியமான புரதமாகும், இது பசுவின் இனத்தைப் பொறுத்தது.
பசுவின் பாலில் உள்ள மொத்த புரதத்தில் 95 சதவீதம் கேசின் மற்றும் மோர் புரதத்தால் ஆனது. பீட்டா-கேசினில் உள்ள அமினோ அமிலங்களின் சமநிலை மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.
பீட்டா-கேசினில் 2 வகைகள் உள்ளன, இதில் A1 பீட்டா கேசின் மற்றும் A2 பீட்டா கேசின் ஆகும். ஐரோப்பிய இன மாடுகளின் பாலில் A1 அதிகமாகவும், இந்திய பூர்வீக மாடுகளின் பாலில் A2 அதிகமாகவும் உள்ளது. எனவே இந்த A2 நெய்யானது இந்திய பூர்வீக மாடுகளின் பாலின் சேர்க்கையாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |