சூரிய கிரகணத்தில் சூரியனை ஊடுருவிச் சென்ற விமானம்
முழு சூரிய கிரகணத்தின் வழியே பறக்கும் விமானம் என்ற காப்சனுடன் பகிரப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு கடந்து செல்லும் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும். இந்த சூரிய கிரகணம் ஒரு ஆண்டிற்கு இரண்டு முறை வரும்.
இந்த 2024 ம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் நேற்றைய தினம் 8ம் திகதி வந்த நிலையில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளில் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது.
இந்த நேரத்தில் அனைவரும் சூரியனை தங்கள் போன் கமராக்களில் பதிவு செய்து புகைப்படங்களை எடுத்து கொண்டனர். அப்போது ஒருவர் தனது கமராவில் சூரியனை எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த புகைப்படமானது விமானம் ஒன்று சூரியனை தாண்டி வருவதை போன்று படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போது காட்டு தீ போல் பகிரப்பட்டு வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
INCREDIBLE SHOT: Plane flying through total solar eclipse in Jonesboro, Arkansas
— Insider Paper (@TheInsiderPaper) April 8, 2024
(? Kendall Rust) pic.twitter.com/kO9KDyvOB7